விஜய் அரசியலுக்கு வந்தது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லையா? அதான் விவாகரத்தா? ஆதவ் அர்ஜுனா ஓபன் டாக்
சென்னை: தனது குடும்பத்தையும் மீறிதான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதற்காகத்தான் இத்தனை பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தவெக சார்பில் நேற்று சென்னையில் நடந்த மகளிர் தின விழாவில் அவர் பேசுகையில், விஜய் வடசென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார். வில்லிவாக்கம் அல்லது பெரம்பூர் தொகுதியில் நிற்க வாய்ப்புள்ளது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒருவரும் சாலையில் நடக்க முடியாது. சிறுமி முதல் பார்க்கும் பெண்களை எல்லாம் திமுகவினர் பாலியல் சீண்டல் செய்கிறார்கள். இப்படிப்பட்ட கட்சியை உருவாக்கிவிட்டு முதல்வர் ஸ்டாலின் தினமும் கண்டுக்கொள்ளாமல் கண்மூடி செல்கிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கையெழுத்திட்டதும் தைரியம் வந்துவிட்டது போல் இருக்கின்றனர். அது கல்லாப்பெட்டி கூட்டணி. திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் நல்ல கட்சியாக இருக்கும்.
மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்கிறது என்றால் தமிழகத்தில் மாநில சரக்கு வரியை விதிக்கிறார்கள். தேர்தல் அறிவிப்புக்கு பின் விஜய் தெருத்தெருவாக பிரச்சாரத்திற்கு செல்லும் போது மக்களின் எழுச்சியை பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், எனது வாழ்வில் இருவர் மட்டுமே ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்தனர். ஒருவர் என் அம்மா, இன்னொருவர் பெரியம்மா! என் அம்மா நல்ல படிப்பாங்க, நிறைய குறிக்கோள் இருந்தது. அதை அம்மாவிடம் சொல்ல பயந்து திருமணம் செய்து கொண்டு அங்கு ஏற்பட்ட பிரச்சினையால் இறந்துவிட்டார்.
ஆனால் எங்கள் பெரியம்மா பயங்கரமான கேடி! என் பாட்டியிடம் சண்டை போடுவார். பாட்டி சொன்னது போல் திருமணம் செய்யாமல் படிக்க போய்விட்டார். அவர் படித்து தமிழகத்தில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியானார். அவர்தான் திலகவதி ஐபிஎஸ்.
அவரை பார்த்து பார்த்து நான் வளர்ந்தேன். ஒரு பெண் எப்படி கண்ணியமாக நடக்க வேண்டும், ஒரு பெண்ணின் உணர்வு எப்படி இருக்கும் உள்ளிட்டவை குறித்து சொல்லி சொல்லி என்னை வளர்த்தார்கள்.
எனவே தவெகவுக்கு பெண்கள்தான் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் எல்லாம் பின்னால் வருகிறோம். பூத் கமிட்டியில் கூட மொத்த பேரையும் பெண்களாகவே போட்டுவிடுங்கள் என நான் சொல்லியிருக்கிறேன்.
பெண்களை யாராவது ஏதாவது செய்தால் நம் வி.எஸ்.பாபு அண்ணன் இருக்கிறார், அவர் பார்த்துக் கொள்வார். வடசென்னையில் ஒரு ராயப்பனாக வி.எஸ்.பாபு இருக்கிறார். நாமெல்லாம் தேர்தல் களத்தில் விளையாடுவோம், யாராவது நம்மை தொந்தரவு செய்தால் அவர் பார்த்துக் கொள்வார்.
தனது குடும்பத்தையும் மீறிதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என விஜய் அறிவித்துவிட்டார். அதற்காகத்தான் இவ்வளவு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அதுதான் உண்மை. இது என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
தமிழ்நாட்டு மகளிரின் உரிமைகள், சுதந்திரம், பாதுகாப்பு போன்ற வளமான வருங்காலத்தை உறுதிப்படுத்தும் விதமாகக் கழகத் தலைவர் அவர்கள் மகளிர் தின விழாவில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அமைந்திருப்பதாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
— Aadhav Arjuna (@AadhavArjuna) March 8, 2026
அதன் சிறப்புகளையும், தொலைநோக்குப் பார்வைகளையும் விளக்கும்… pic.twitter.com/PqWxVvxIgV
தவெக மேடைகளில் நான் சில உண்மைகளை பேசும்போது அது மக்களிடம் கனெக்ட் ஆகும்போது திமுக தூண்டுதலில் சிலர் என்னையும் என் குடும்பத்தையும் திட்டுகிறார்கள். எனக்கே இப்படி என்றால் விஜய்க்கு எவ்வளவு இருக்கும் என ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா தற்போது வெளிப்படையாக பேசியிருப்பதற்கு தவெகவினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். எதற்காக விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களை பொது இடத்தில் பேசி, அதை எதிர்க்கட்சிக்கு கன்டென்ட்டாக கொடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா வழக்கு தொடுத்துள்ளார். அதில் நடிகர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஆதவ் அர்ஜுனா, சங்கீதாவுக்கு விஜய் அரசியலுக்கு வந்தது பிடிக்கவில்லை என்பதை போல் பேசி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
ரஜினி பற்றி பேசிய சர்ச்சை அடங்குவதற்குள் புதிய பஞ்சாயத்தை இழுத்த ஆதவ்! மாணிக்கம் தாகூர் கடும் கோபம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications