சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆடிக்கிருத்திகை..திருத்தணியில் அமைச்சர் சேகர்பாபு தரிசனம்..24 மணி நேரமும் அன்னதானம்

ஆடி கிருத்திகை நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

Google Oneindia Tamil News

திருத்தணி: ஆடிக்கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் 24 மணி நேரமும் சாமி தரிசனம் செய்யவும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Recommended Video

    ஆடிக்கிருத்திகை..திருத்தணியில் அமைச்சர் சேகர்பாபு தரிசனம்..24 மணி நேரமும் அன்னதானம்

    முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை வீடாக போற்றப்படுவது திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    அஸ்வினி பரணி, ஆடி கிருத்திகை இந்த ஐந்து நாள் நிகழ்ச்சியுடன் தெப்ப திருவிழாவும் நடைபெறும்.
    இந்த நிகழ்ச்சி தமிழக அரசின் அனுமதி பெற்ற ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் அறநிலை துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்! டன் கணக்கில் அரிசி-பால் பவுடர்-மருந்துகளுடன் புறப்பட்ட 3-வது கப்பல்! இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்! டன் கணக்கில் அரிசி-பால் பவுடர்-மருந்துகளுடன் புறப்பட்ட 3-வது கப்பல்!

     முருகனுக்கு அபிஷேகங்கள்

    முருகனுக்கு அபிஷேகங்கள்

    இப்படி சிறப்பு வாய்ந்த இந்த ஆடி கிருத்திகை நிகழ்ச்சியில் இன்று மலைக்கோயில் மூலவர் முருகப் பெருமானுக்கு அதிகாலை பால், பழம், பஞ்சாமிர்தம், இளநீர், போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு தங்க கவச அலங்காரம், தங்கவேல், தங்க சேவல் கொடிவேல், பச்சை மரகத கல் மாலை, வைர கிரீடம், ஆகிய சிறப்பு அலங்காரத்தில் மூலவர் முருகப்பெருமான் காட்சியளித்தார்.

     பக்தர்கள் தரிசனம்

    பக்தர்கள் தரிசனம்

    இதேபோல் மலைக் கோயிலில் உற்சவர் சண்முக பெருமாள் சிறப்பு தங்க ஆபரண அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முருக பக்தர்கள் இரவு முதல் தொடர்ச்சியாக 5 மணி நேரம் காத்திருந்து பால்காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி, மற்றும் முருகப்பெருமானுக்கு நேர்த்திக் கடனாக மொட்டை அடித்தும். பம்பை உடுக்கை மேளங்களுடன் சிறப்பு வாத்தியங்கள் இசைத்தவாறு முருகப்பெருமானை தரிசிக்க மலைக்கோயிலில் பக்தர்கள் திரண்டனர்.

     அரோகரா முழக்கம்

    அரோகரா முழக்கம்

    லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகிறார்கள். இவர்கள் பக்தி பரவசத்தில் அரோகரா!! அரோகரா!! என்று கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி கிருத்திகை நிகழ்ச்சியில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவரது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் துறையின் செயலாளர் சந்திரமோகன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி, நகர பொறுப்பாளர் வி.வினோத் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

     24 மணிநேரமும் அன்னதானம்

    24 மணிநேரமும் அன்னதானம்

    இந்த ஐந்து நாள் நிகழ்ச்சியில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஆகிய ஆறு மாவட்ட போலீசார் 1500 பேர் காஞ்சிபுரம் டிஐஜி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    திருக்கோயில் சார்பில் 24 மணி நேரமும் மலைக்கோயில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    இன்று மாலை ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா நிகழ்ச்சியின் சிறப்பான நிகழ்வான மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

     விழாக்கோலம் பூண்ட திருத்தணி

    விழாக்கோலம் பூண்ட திருத்தணி

    திருத்தணி முழுவதும் மற்றும் மலைக்கோயிலிலும் முருக பக்தர்கள் நிறைந்துள்ளனர். இதனால் திருத்தணியே விழா கோலமாக காட்சியளிக்கிறது. சாமி தரிசனம் செய்ய வந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வரின் ஆலோசனையின் பேரில் திருத்தணி முருகன் கோயில் ஆடி கார்த்திகை தெப்ப திருவிழா நிகழ்ச்சி இந்து அறநிலை துறையின் நேரடி ஏற்பாட்டில் சிறப்பான முறையில் நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறினார்.

     சிறப்பான ஏற்பாடுகள்

    சிறப்பான ஏற்பாடுகள்

    திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆடி கிருத்திகை நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆடி கிருத்திகை நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பக்தர்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு, சுகாதார வசதிகள், தற்காலிக மருத்துவ முகாம்கள், குடிதண்ணீர், மற்றும் கழிப்பிட வசதிகள், என அனைத்தும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.

     இரவு முழுவதும் கோவில் திறப்பு

    இரவு முழுவதும் கோவில் திறப்பு

    லட்சக்கணக்கான பக்தர்கள் மேலும் மூன்று நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் இரவு முழுவதும் திருக்கோயில் திறந்திருக்கிறது பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த சிறப்பான ஏற்பாடுகள் அறநிலை துறையின் செயலாளர் சந்திரமோகன் மற்றும் இந்து அறநிலை துறை உயர் அதிகாரிகள் 100 பேர் நேரடி கண்காணிப்பில் இந்த ஆடி கிருத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

    English summary
    Minister Sekar Babu has said that arrangements have been made for 24-hour darshan of Sami and distribution of alms at Tiruthani Murugan temple on the occasion of Aadi Kiruthikai festival.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X