அவமானமா இருக்கு, இன்னுமா கண்டுபிடிக்க முடியல? குடிநீர் தொட்டியில் மலம்கலந்த விவகாரம்.. சீறிய வசீகரன்
வேங்கைவயல் விவகாரம் குறித்து பழங்குடியினர் மாநில ஆணையத்தில் ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது
சென்னை: வேங்கைவாயில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை இதுவரையில் கண்டிறிய முடியவில்லை என்பதால் அரசியல் பின்புலம் இருக்குமோ என்ற அச்சம் உள்ளது.. திமுக அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக ஆம் ஆத்மி எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமூக செயல்பாட்டு அமைப்புகள் கொதித்தெழுந்தனர்.. இந்த விவகாரத்தில், தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரியும், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்கவும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.

விசிக
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.. இதுகுறித்த விசாரணை நடந்தும்கூட, ஒருத்தரும் கைது செய்யப்படவில்லை.. அதனால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 14-ம் தேதி மாற்றியது.. இப்போதைக்கு 60 பேரிடம் இதுகுறித்த விசாரணை நடந்து முடிந்துள்ளது.. விசாரணையில் கிடைக்கும் தகவல்களை முடிந்தவரை அறிவியல் தொழில்நுட்பத்துடன் பொருத்திப் பார்த்து, உறுதி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சீறிய திருமாவளவன்
மனித மலம் கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தையே நடத்தியது.. அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம், "இந்த சம்பவம் நாட்டுக்கே அவமானமான செயல், சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுவதை வரவேற்கிறோம்.... ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையே.. அதுதான் என்பது வருத்தம் அளிக்கிறது.. மத்திய மாநில பட்டியலின ஆணையம் உள்ளது. இவை இதுவரை புதுகோட்டை பகுதிக்கு செல்லவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. யார் பாதிக்கப்பட்டார்கள் என்பது பிரச்சனை அல்ல, மனித குலத்திற்கே அவமானமான பிரச்சனை இது. இதில் மற்ற அரசியல் கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தாது வருத்தத்தை அளிக்கிறது" என்று தன் ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.

வசீகரன்
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது.. இச்சம்பவம் தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் ஆணையம் செயல்படாத நிலையில் உள்ளது. எந்த வித அதிகாரமும் இல்லாமல் சுதந்திரம் இல்லாமல் செயல்படும் ஆணையம் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல்.

அவமானம்
வேங்கைவாயில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை இதுவரையில் கண்டிறிய முடியவில்லை என்பதால் அரசியல் பின்புலம் இருக்குமோ என்ற அச்சம் உள்ளது.. ஆனால், இது ஒரு அவமானமான செயல்.. குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அந்த ஊரில் உள்ள எல்லாருக்குமே அரசின் உதவி கிடைக்க வேண்டும். வேங்கைவாயில் விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.. விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்துள்ளார் வசீகரன்.
-
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்!












Click it and Unblock the Notifications