ரேஷன் கடைகளிலேயே ஆவின் பால் பொருட்களையும் வாங்கலாம்.. விரைவில் வரப்போகும் வசதி.. வேற லெவல் பிளான்
சென்னை: ரேஷன் கடைகளில் விரைவில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்யப்படும் என்றும் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாகவும் ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
மக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. காலத்திற்கேற்பவும் மக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாகவும் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், ஆவின் பால் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக ஆவின் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

பால் விற்பனையை வருடத்திற்கு 20% அதிகரிக்க கூட்டுறவு துறையின் நெட்வொர்க்கை நாங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலீட்டு செலவுகளை ஈடுகட்டுவதற்கு பால் பொருட்களின் விற்பனையை விரிவுபடுத்துவது அவசியம். கடந்த நிதியாண்டில் ரூ. 524 கோடி மதிப்பில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாகியிருக்கிறது. இந்த விற்பனையை மேலும் அதிகரிக்கும் விகிதமாக ஆவின் பொருட்களை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மொத்த விற்பனையாளர்களை நியமித்து விற்பனை நடைபெற்று வந்தது.

முதலீட்டு செலவுகளை ஈடுகட்ட பால் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பது முக்கியம் என்பதால் தற்போது ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையா கூறுகையில், "ஆவின் தயாரிப்புகளை நியாய விலை கடைகளில் விற்பனை செய்வோம். தற்போது ஆவின் தயாரிப்புகள், பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது. நியாய விலை கடைகளில் இட வசதி மற்றும் இதர வசதிகளை ஆய்வு செய்த பிறகு ஆவின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வோம்" என்றார்.

ஆவின் அதிகாரிகள் கூறுகையில், "விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் விற்கும் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
முன்னதாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:- ஆவினில் தினசரி 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்களின் விற்பனை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு போல் இல்லாமல் நடப்பு ஆண்டில் பண்டிகை நாட்களில் மக்களுக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் தடையின்றி விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் தயாராக உள்ளது என்றார்.
மேலும் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், கடந்த ஆண்டு, ஆவின் தினசரி பால் கொள்முதல் ரூ.26 லட்சமாக சரிந்தது. தற்போது தினமும் 35 லட்சம் முதல் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பால் கொள்முதல் மேலும் அதிகரிக்கும்.
சென்னை பகுதியில் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் பால் வழங்குவதற்கான இலக்கை வெற்றிகரமாக எட்டிய பிறகு, ஆவின் அதன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை வலுப்படுத்த கவனம் செலுத்தி வருகிறது. ஆவின் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications