அப்பட்டமாக தெரியும் "ஸ்விங்" வாக்குகள்.. தேர்தல் முடிவே மாறிவிடும்.. இதெல்லாம் உண்மையா? பரபர சர்வே!
சென்னை: அதிமுக, திமுகவிற்கு எல்லா தேர்தலிலும் பாரம்பரியமாக செல்லும் வாக்குகள் இந்த முறை ஸ்விங் ஆகிவிடும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக ஆட்சியோ, கட்சியோ எப்படி இருந்தாலும்.. ஒரு சிலர் தாங்கள் பாரம்பரியமாக வாக்களிக்கும் கட்சிகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். திமுகவிற்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மக்கள் அதற்குத்தான் வாக்களிப்பார்கள்.
அதேபோல் இரட்டை இலையை பார்த்ததும் அதற்கு வாக்களிக்கும் அதிமுகவினரும் அதே கட்சிக்குத்தான் என்ன நடந்தாலும் வாக்களிப்பார்கள். இந்த பாரம்பரிய வாக்காளர்கள் கட்சி மாறி வாக்களித்தால் அதுதான் ஸ்விங் வாக்கு என்று அழைக்கப்படும்.

முழு கணிப்பு
ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பின் படி தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெறும்.
- திமுக கூட்டணி 43% வாக்குகள் பெறும், 161-169 இடங்கள் பெற்று ஆட்சி அமைக்கும்.
- அதிமுக கூட்டணி 30.6% வாக்குகள் பெறும், 53-61 இடங்கள் பெறும்
- அமமுக கூட்டணி 1-5 இடங்களில் வெற்றிபெறும்.
- மக்கள் நீதி மய்யம் 2-6 இடங்களில் வெற்றிபெறும்.

ஸ்விங்
இந்த கருத்து கணிப்பின்படி அதிமுகவின் வாக்குகளில் 13.1 வாக்குகள் ஸ்விங் ஆகும். இதில் 4.3%வாக்குகள் அதிமுகவிடம் இருந்து திமுக வசம் செல்லும். மற்ற வாக்குகள் அமமுக, மநீம கட்சிகளுக்கு செல்லும் . அதாவது திமுகவின் வாக்கு சதவிகிதம் 39.3ல் இருந்து 43.7 ஆக அதிகரிக்கும்.

அதிமுக
அதிமுகவின் வாக்கு சதவிகிதம் 43.7ல் இருந்து 30.6% ஆக குறையும். இதன் காரணமாக தேர்தல் முடிவுகள் மொத்தமாக மாறும் என்று ஏபிபி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக 1% வாக்குகள் ஸ்விங் ஆனாலே 4-5 சீட்டுகள் இடமாறும். அப்படி இருக்கும் 13% வாக்குகள் ஸ்விங் ஆனால், அதிக அளவில் இடங்கள் மாறும் வாய்ப்பு உள்ளது.

திமுக
ஏபிபி கருத்து கணிப்பின்படி இதனால் திமுக கடந்த தேர்தலை விட 70 இடங்களை அதிகம் பெற வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்புபடி பார்த்தால் ஸ்விங் வாக்குகள் திமுக பக்கமும் மற்ற கட்சிகள் பக்கமும் செல்கிறது. ஆனால் உண்மையில் இவ்வளவு சதவிகித வாக்குகள் வேறு கட்சிக்கு செல்லுமா என்பது சந்தேகம்தான்.

சந்தேகம்
அதிமுக இவ்வளவு வாக்குகளை இழக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் களத்தில் அதிமுகவிற்கு ஆதரவாக சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் பலர் இன்னும் அதிகமுகவிற்கு ஆதரவான மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

ஆதரவு
அதிமுகவின் தேர்தல் அறிக்கை, வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளால் அதிமுகவிற்கு ஆதரவான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அதிமுக கண்டிப்பாக அதிக அளவு வாக்குகளை தக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் கணிப்பில் இருப்பது போல அதிமுக 13% வாக்குகளை எல்லாம் இழக்குமா என்பது சந்தேகம்தான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications