டாப் லிஸ்ட்.. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள்.. ஒரே ஆண்டில் இப்படியா .. மிரள வைத்த இபிஎப்ஓ டேட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022-23ம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் அமைப்பு சார்ந்த துறைகளில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைகள் பெற்றிருப்பதாக EPFO பதிவுகளில் உள்ள டேட்டா தெரிவிக்கிறது.

நாட்டில் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், வேலைவாய்ப்புகள் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உருவாகி உள்ளது என்பது குறித்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பகம், அதில் சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடும்.

 According to EPFO data in Tamil Nadu, how much employment is generated in one year?

அந்த வகையில் 2022-23ம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் முக்கியமான துறைகளில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைகள் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 18-21 வயதுக்குட்பட்டவர்களில் 3,76,872 வேலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது.இதுதவிர உற்பத்தி, மின்னணுவியல் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பிரிவுகளிலும் அளவுக்கு அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 2021-22 நிதியாண்டில் அமைப்பு சார்ந்த துறைகளில் 12,84,986 பேர் வேலை பெற்றிருந்த நிலையில், சுமார் 9.4% அதிகரித்து 2022-23 நிதியாண்டில் 14,05,171 பேருக்கு வேலைகள் கிடைத்துள்ளது,.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவு செய்யப்பட்ட புதிய பதிவுகளின் எண்ணிக்கையை வைத்தே இந்த வேலை உருவாக்கம் அளவிடப்படுகிறது. 2022-23 மார்ச் மற்றும் நிதியாண்டுக்கான தற்காலிக ஊதியத் தரவை மே 20 அன்று இபிஎப்ஓ வெளியிட்டது.

இதில் தமிழ்நாட்டில், 18-21 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக வேலைகள் கிடைத்தது. புள்ளிவிவரப்படி பார்த்தால் 2022-23 இல் 3,76,872 வேலைகள் உருவாக்கப்பட்டன. . 22-25 வயதிற்குட்பட்ட பிரிவில் 3,68,981 , 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2,44,891 பேருக்கும் 29-35 வயதிற்குட்பட்ட பிரிவில், 2,35,006 பேருக்கும், 26-28 வயது வரம்பில் 1,63,658 பேருக்கும் புதிதாக வேலைகள் கிடைத்துள்ளன. அதேநேரம் 2022-23ல் 18 வயதுக்கு குறைவானவர்கள் 15,763 பேர் கூடுதலாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தேசிய அளவில், 2022-23ல் இபிஎப்ஓவில் சுமார் 1.39 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர், இது 2021-22ல் 1.22 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 13.22% அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை உற்பத்தி, மின்னணுவியல் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பிரிவுகளில் தான் அதிகம் பேர் வேலை பெற்றுள்ளனர்.

 According to EPFO data in Tamil Nadu, how much employment is generated in one year?

எனினும் ஜவுளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் அதிக அளவு வேலைவாய்ப்பு உருவாக்கி உள்ளன என்று பொன் ப்யூர் கெமிக்கல்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், MSME இந்திய தொழில் கூட்டமைப்பு துணைக்குழுவின் தென் மண்டல தலைவருமான எம்.பொன்னுசாமி கூறினார்.

இந்த நிதியாண்டில் இபிஎப்ஓ உறுப்பினர்கள் சேர்க்கையில் அதாவது அதிக வேலைவாய்ப்பு உருவாக்கிய டாப் ஐந்து மாநிலங்கள் லிஸ்ட்டை பார்ப்போம். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா ம் குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்கள் தான் டாப் இடத்தில் இருக்கின்றன. இந்த மாநிலங்களில் தான் 58.68% பேர் பிஎப்இல் புதிதாக சேர்த்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் 20.63% பிஎப் உறுப்பினர்களுடன் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு 10.83% பிஎப் உறுப்பினர்களை சேர்த்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இயக்குனர் கே.ஆர். சண்முகம் இந்த டேட்டாக்கள் குறித்து கூறும் போது, இபிஎப்ஓ டேட்டாக்கள் அமைப்பு சார்ந்த அதாவது முறையான வேலைவாய்ப்பின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே காட்டுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

இதனிடையே தமிழ்நாட்டில் 2021-22ல் 10.5% ஆக இருந்த பிஎப் உறுப்பினர்களின் சேர்க்கை 2022-23ல் 10.1% ஆகக் குறைந்துள்ளது என்றும் சண்முகம் சுட்டிக்காட்டினார். 2020-21 இல் கோவிட்-19 இன் உச்சக் கட்டத்தில், தமிழ்நாட்டின் பங்கு 8.6% ஆக இருந்ததும் என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+