போராட்டத்தை விடுங்க.. கர்நாடகா தர வேண்டிய காவிரி தண்ணீரை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்: துரைமுருகன்
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரில் பந்த் நடந்துவரும் நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் இருந்து தண்ணீர் தருவது இல்லை. இதுதொடர்பாக நீண்ட காலம் சட்ட போராட்டங்கள் நடந்தன. இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். ஆனாலும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதை கர்நாடகா மதிப்பதில்லை. கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு ஒருபக்கம் சட்ட போராட்டமும் நடத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க கர்நாடக நலனே முக்கியம் என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என கர்நாடக தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
கர்நாடகாவில் குடிக்க தண்ணீர் இல்லை எனக்கூறி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க அங்குள்ள விவசாய, கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீற முடியாமல் கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதனை கண்டித்து கேஆர்எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பந்த் நடந்தது.
இதனை தொடர்ந்து இன்று பெங்களூரில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக ஜல ரக்சனா சமீதி(கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு) சார்பில் இந்த பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பந்த் நடக்கிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நீரை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் கூறியதாவது:- உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால், உச்சநீதிமன்றத்திற்கு என்று கொடுக்கப்பட்ட தனித்த அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியலில் தெளிவு செய்தவர்கள் உணர வேண்டும். இதேபோல் உச்ச நீதிமன்றமும் தங்களுடைய கருத்துக்கு, நீதியில் எதிர்ப்பு வருகிறது என்றால் அதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 13.09.2023 முதல் 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் தரவேண்டும். நாளையோடு அந்த 15 நாள் கெடு முடிகிறது. இடை இடையே கர்நாடகாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றாலும், அவர்கள் தர வேண்டிய தண்ணீரை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் குறைவாக நீர் திறந்தாலும், இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி நீர் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படுகிறது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் கணக்கு படி பார்த்தால் இன்னும் 11 ஆயிரம் கன அடி நீர் தரவேண்டியது இருக்கு.. இது நாளைக்குள் தமிழகத்திற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். காவிரி நீர் ஒழுங்காற்று கமிட்டியின் அடுத்த கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆன்லைனில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நமக்கு தேவையான 12,500 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications