சென்னையில் கார் பந்தயம்.. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பார்முலா 4 கார் பந்தய விளையாட்டு நடக்க இருந்த மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பார்வையாளர்கள் அமரும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

கொளத்தூர் உதவி காவல் ஆணையராக இருந்த வந்தவர் சிவக்குமார். இவர் இன்று சென்னை தீவுத்திடல் அருகே பார்முலா 4 கார் பந்தய விளையாட்டு நடக்க இருந்த இடத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் இடத்தில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நண்பகல் நேரத்தில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.

chennai police heart attack

இதில் மயங்கி கீழே விழுந்த சிவக்குமாரை சக காவலர்கள் உடனடியாக மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவக்குழு அவருக்கு என்ன மாதிரியான உடல் பாதிப்பு ஏற்பட்டது என்று கண்டறிவதற்காக பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெண்டிலேட்டர் எனும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.

எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. உடல் நிலை தொடர்ந்து மோசடைந்ததாகவும், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை இருதவிய மருத்துக்குழு செய்தாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பார்முலா 4 கார் பந்தய போட்டிக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் உயர் அதிகாரி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

1997 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த சிவக்குமார், பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளார். பல வழக்குகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து உயர் அதிகாரிகளால் பாராட்டப்பெற்றவர் சிவக்குமார். இவரது திடீர் மரணம் காவலர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+