இளம் வாக்காளர்களே சூப்பர் நியூஸ்! நவம்பரில் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 13,14 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

அதேபோல தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் எங்கும் நடைபெறவில்லை. அது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் சிறப்பு முகாம்

வாக்காளர் சிறப்பு முகாம்

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு வரும் நவம்பர் 13, 14 தேதிகளிலும் மற்றும் 27, 28 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி வரும் ஜனவரி 1ஆம் தேதி 18 வயது நிறைவடைபவர்கள் தங்களை வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளலாம்.

கொரோனா வழிமுறைகள்

கொரோனா வழிமுறைகள்

மேலும், இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றையும் பொதுமக்கள் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து முகாம்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நான்கு நாள்களிலும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு சில ஆண்டுகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பிய பல கோடி நிதியும் திரும்பி அனுப்பப்பட்டன. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற வேண்டிய பல்வேறு பணிகள் அப்படியே தேங்கின.

தேர்தல் எப்போது

தேர்தல் எப்போது

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்பைத் தொடர்ந்து கடந்த 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகள் ஆகியவற்றில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+