சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா டெஸ்ட் செய்ய தயங்காதீர்கள் மக்களே.. பிரபலங்களுடன் இணைந்து ACT Grants அசத்தல் விழிப்புணர்வு

சென்னை: ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்முனைவோரின் லாப நோக்கற்ற கூட்டமைப்பான ACT Grants (ஆக்ட் கிராண்ட்ஸ்), பிரபலங்களான ஹிருத்திக் ரோஷன், குணால் கபூர், ராகுல் டிராவிட் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் ஆதரவோடு 'Jaanch Bachaye Jaan' என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளது.

கோவிட் -19 பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றி பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்கள் மூலம் பல லட்சம் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களுடன் உரையாட உள்ளனர். ACT Grants இந்த ஏற்பாட்டை செய்கிறது.

ACT Grants teams up with celebrities to launch ‘Jaanch Bachaye Jaan’ to highlight the importance of Covid-19 testing

கோவிட் -19 நோயுடன், உலகம் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்கள் மத்தியில் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது 'Jaanch Bachaye Jaan'. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகவும், கோவிட் -19 பரவல் வளைவை தட்டையாக மாற்றவும், மக்களை அதிக அளவு பரிசோதனைக்கு உட்படுத்த ஊக்குவிக்கும் முயற்சிகளில், அரசுக்கு, உதவுவதற்கான ஒரு நடவடிக்கை இதுவாகும்.

கோவிட் -19 பரவலானது நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் பரிசோதனை செய்ய மக்களுக்கு தயக்கம் இருக்கிறது. பெரும்பாலும் பயம், தயக்கம் மற்றும் சமூக புறக்கணிப்பு என பல தயக்கங்களில் நோய் அறிகுறி உள்ளோர் ஆளாகிறார்கள். எனவே அறிகுறி இருந்தாலும், பரிசோதனை செய்ய செல்வது இல்லை. ஆனால், வீடியோக்கள் மூலம், இந்த தயக்கத்தை நாங்கள் மாற்ற உள்ளோம். பரிசோதனை என்பது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் பொறுப்பான நடவடிக்கை என்று மக்களுக்கு அறிவுறுத்துவதே இதன் நோக்கம். மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது, தவிர்க்கப்பட கூடாதது.

ACT Grants teams up with celebrities to launch ‘Jaanch Bachaye Jaan’ to highlight the importance of Covid-19 testing

ACT Grants செய்தித் தொடர்பாளர் சுடிப்டோ சன்னிகிராஹி கூறுகையில், "இந்த முன்முயற்சியின் பின்னணியில் உள்ள எங்கள் நோக்கம், கோவிட் 19 அறிகுறிகளை யாராவது உணர்ந்தால் மருத்துவர்களை உடனே அணுகவும், மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் கோவிட் -19 க்கு பரிசோதனை செய்யவும் மக்களை ஊக்குவிப்பதாகும். சமூகப் பொறுப்பு என்பது காலத்தின் தேவையாகும், மேலும் இந்த தொற்றுநோய் காலத்தில் முடிந்தவரை அதிகமான மக்களை எங்கள் மெசேஜ் சென்று சேரவும், பாதுகாப்பான பழக்கங்களைக் கடைப்பிடிக்க, அவர்களுக்கு உதவுவதற்கும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். " என்று தெரிவித்தார்.

"ஒரு சமூகமாக நமக்கு இது சவாலான காலம். கோவிட் -19 இன் தாக்கத்தை குறைக்க மக்களின் ஆதரவு தேவை. இந்த முயற்சி நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையாக நிற்கவும், சமூகத்தை கோவிட் -19 க்கு சோதனைக்கு உட்படுத்த ஊக்குவிக்கவும் ஒரு வேண்டுகோள்" என்று ACT Grants, செய்தித் தொடர்பாளர் ஆஷிஷ் அகர்வால் கூறினார்.

சைஃப் அலிகான் கூறுகையில், "நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம், முன்பை விட இப்போது ஒருவருக்கொருவர் சார்ந்து உள்ளோம். நாம் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும், மேலும் COVID19 சோதனை மீதான தயக்கத்தை அகற்ற வேண்டும். சோதனைக்கு உட்பட வேண்டியது நமது பொறுப்பு. இந்த முன்முயற்சியின் மூலம், ஒவ்வொரு இந்தியரும் COVID 19 சோதனை குறித்து விழிப்புணர்வை பரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன், உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்யுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், நம் அனைவரையும் பாதுகாக்க சோதனை செய்யுங்கள். " என்று தெரிவித்தார்.

ஹிருத்திக் ரோஷன் கூறுகையில், "ஒரு போரில் வெற்றி பெற நீங்கள் முதலில் உங்கள் எதிரியை அறிந்து கொள்ள வேண்டும். இந்த தொற்றுநோய்க்கு எதிரான நமது போராட்டத்தில் பொறுப்புள்ள இந்தியர்களாக நாம் எடுக்கக்கூடிய முதல் படி சோதனை. இந்த இயக்கத்தில் சேருங்கள். நோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருக்க கூடிய மருத்துவ பணியாளர்களுக்கு உதவ, நீங்களே தாங்களாக முன்வந்து சோதனை செய்து கொள்ளுங்கள். நோய் வளைவை, தட்டையாக்குவோம்." இவ்வாறு தெரிவித்தார்.

இந்த முயற்சியின் பலனை அதிகரிப்பதற்காக, சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த பிரச்சாரங்கள் நேரலை மூலம் செல்லும். ஏனெனில் இந்த இரண்டு தளங்களும் கடந்த சில மாதங்களாக பார்வையாளர்களின் எண்ணிக்கையில் அதிவேகமாக அதிகரித்துள்ளன.

ஆக்ஷன் கோவிட் -19 குழு அல்லது ACT Grants என்பது செக்வோயியா இந்தியா, மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ், எஸ்ஐஎஃப் பார்ட்னர்ஸ், லைட்ஸ்பீட் வென்ச்சர்ஸ், கலாரி கேபிடல், ஆக்செல், சிராட்டே வென்ச்சர்ஸ், ஓமிடியார் நெட்வொர்க் மற்றும் நெக்ஸஸ் பார்ட்னர்ஸ் போன்ற சிறந்த வி.சி நிறுவனங்களால் அமைக்கப்பட்ட லாப நோக்கற்ற முன்முயற்சியாகும்.

கியூர்.ஃபிட் இணை நிறுவனர் முகேஷ் பன்சால். அர்பன் கம்பெனி நிறுவனத்தின் இணை நிறுவனர் (முன்னர் அர்பன் கிளாப் என்று அழைக்கப்பட்ட நிறுவனம்) அபிராஜ் பால் போன்ற பலர் தொழில்முனைவோர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் ஏற்படும் தாக்கத்திற்கு உதவி செய்கிறார்கள்.

ACT Grants பற்றி:

ACT Grants என்பது இந்தியாவின் வி.சி மற்றும் ஸ்டார்ட்அப் சமூகத்தால் உருவாக்கப்பட்ட 100 கோடி ரூபாய் மானிய அமைப்பு. இது COVID-19 ஐ எதிர்த்துப் போராடக்கூடிய யோசனைகளுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. ACT என்பது 'ஆக்ஷன் கோவிட் -19 குழு' என்பதைக் குறிக்கிறது மற்றும் COVID-19 பரவலைத் தடுப்பது, சோதனையை அளவிடுதல், வீட்டிலேயே நோய் மேலாண்மை, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மேம்பட்ட ஆதரவு, மோசமான நோயாளிகளின் மேலாண்மை போன்றவற்றில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், மன ஆரோக்கியத்திற்கும், உதவுகிறது. தொற்றுநோய் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு தேவைப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் புதுமையான ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடமிருந்து மூலதன-திறமையான, தீர்வுகளை ACT Grants நாடுகிறது. கோவிட் -19 கண்டறிதல், தடுப்பு மற்றும் ஒழிப்பு ஆகியவற்றில் பெரிய அளவிலான தாக்கத்தை உருவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் குழுக்களை ஏற்படுத்தி, அதிகாரம் அளிப்பதே இதன் நோக்கம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X