ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
சென்னை: தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக முதல் நபராக வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார் நடிகர் அஜித். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்பாகவே வாக்குச்சாவடிக்கு வந்த அஜித், காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் 102 லோக்சபா தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 68, 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 10. 92 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

இன்று சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக, 6 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை பரிசோதிப்பதற்காக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், நடிகர் அஜித், முதல் நபராக ஜனநாயக கடமை ஆற்ற வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். தென் சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் வாக்களிப்பதற்காக அஜித் குமார் வருகை தந்துள்ளார்.

7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் முன்கூட்டியே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார் அஜித். வாக்குப்பதிவு தொடங்குவதற்காக வாக்குச்சாவடியில் காத்திருக்கிறார் அஜித். அவரை அதிகாரிகள் காத்திருக்கச் சொன்ன நிலையில், ஒன்றும் பிரச்சனை இல்லை, நான் வெயிட் பண்றேன் எனக் கூறி வாக்குச்சாவடியில் காத்திருக்கிறார்.
சரியாக 7 மணிக்கு, அஜித்தை வாக்களிக்க, வாக்குச்சாவடி அலுவலர்கள் அனுமதித்ததனர். முதல் நபராக வாக்களித்த அஜித், தனது வாக்கை செலுத்திய பிறகு, மை வைக்கப்பட்ட விரலை காட்டினார்.
2021 சட்டமன்ற தேர்தலின்போதும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே வந்து காத்திருந்து வாக்கு செலுத்தினார் அஜித். அதேபோலவே இன்றும், முதல் வாக்காளராக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்ள்ளார் நடிகர் அஜித்.

கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்கவும், தன்னால் ரசிகர்கள் கூட்டம் ஏற்பட்டால் வாக்குச்சாவடியில் ஏற்படும் பரபரப்பை தவிர்க்கவுமே காலையிலேயே விரைவாக தனது வாக்கை பதிவு செய்வதற்காக வந்து, வாக்களித்துள்ளார் அஜித்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications