Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெஞ்சல் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரணம்! சொந்த செலவில் பனையூருக்கு வரவழைத்த தவெக தலைவர் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, டி.பி.சத்திரம் பகுதி மக்களை பேருந்து மூலம் தனது பனையூர் தவெக அலுவலகத்திற்கு வரவழைத்த நடிகர் விஜய், அவர்களுக்கு ஆறுதலை கூறி ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்.

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட, டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை கண்டறிந்து சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்திற்கு அழைத்திருந்தார் விஜய். அவர்களை பேருந்து மூலம் கட்சி நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.

vijay cyclone fengal

அவர்களின் குறைகளை கேட்ட விஜய் ஒவ்வொருவருக்கும் நிவாரண பொருட்களை, தானே தனது கைகளால், வழங்கினார். நிவாரண பொருட்களில் வேஷ்டி, சட்டை, பெட்ஷீட், மளிகை சாமான்கள் என ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் இருந்தன. பெஞ்சல் புயலால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 29, 30, டிச. 1, 2 உள்ளிட்ட தேதிகளில் அதி தீவிர மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. அவர்களது வீட்டில் இருந்த மளிகை பொருட்கள், தட்டுமுட்டு சாமான்கள், மின் சாதன பொருட்கள் எல்லாம் வெள்ளத்தில் சேதமடைந்திருந்தன. சென்னையை பொருத்தமட்டில் டி.பி.சத்திரம் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களை தவெக நிர்வாகிகளிடம் கூறி கண்டறிய சொல்லியிருக்கிறார் விஜய்.

இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் குறித்த பட்டியலை விஜய்யிடம் நிர்வாகிகள் வழங்கினர். அதன்படி அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூர் அலுவலகத்திற்கு பேருந்து மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார், அதன்படி நிர்வாகிகளும் பாதிக்கப்பட்ட மக்களை இன்று பனையூர் தவெக கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்களுக்கு மதிய உணவு அங்கு தயாரானது. அந்த உணவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிமாறப்பட்டது. இதையடுத்து விஜய் ஒவ்வொரு குடும்பத்தினருடன் அமர்ந்து பேசினார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் , உடைகள் உள்ளிட்டவைகளை தன் கைகளாலேயே வழங்கினார்.

அதில் வயதானவர்கள் இருந்த போது அவர்களுக்கான பொருட்கள் அதிக எடை கொண்டதாக இருக்கும் என்பதால் நிர்வாகிகளை உதவும்படி கூறினார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம்தான் அரசியல் கட்சியை தொடங்கினார். ஆனாலும் அவரது விஜய் மக்கள் இயக்கம் மூலம் உதவிகள் செய்யப்பட்டு வந்தன. கடந்த 2015ஆம் ஆண்டு கூட சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகளையும் மீட்பு பணிகளையும் செய்தனர்.

கடந்த இரு ஆண்டுகளாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை பனையூர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வரவழைத்து பரிசுகளை வழங்கி வருகிறார். தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பிடம் பெற்ற மாணவர்களை அவர்களது பெற்றோர், உடன் பிறந்தோருடன் சொந்த செலவில் பேருந்து மூலம் வரவழைத்து அவர்களுக்கு தேவையான காலை உணவு, மதிய உணவை வழங்கி, பரிசுகளையும் வழங்கினார்.

அது போல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி வரும் அவர், திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+