தனியா போனேன்.. ஓபிஎஸ் கூட்டத்தை சேர்த்துட்டாரு.. ராயப்பேட்டையில் நடந்தது என்ன? பாக்யராஜ் விளக்கம்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோட்டலில் ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசிய போது நடந்தது என்ன என்பது குறித்து நடிகர் பாக்யராஜ் விளக்கியுள்ளார்.
அதிமுகவில் இரு தலைமைகளுக்குள்ளும் மோதல் போக்கு ஏற்பட்டு இருவரும் பிரிந்து கிடக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச் செயலாளர் என தொண்டர்கள் தேர்வு செய்துவிட்டனர். ஓபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்து நீக்கிவிட்டோம். அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே இல்லை என்றும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஓபிஎஸ்ஸை சந்தித்து நடிகர் பாக்யராஜ் ஆதரவு தந்ததாக கூறப்படும் நிலையில் அவர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசுவதாக அறிவித்திருந்தார். இதற்கு தொண்டர்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியதாக தெரிகிறது.

ஓபிஎஸ்
அதாவது ஓபிஎஸ்ஸும் அவரது மகனும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அவர்களுடன் இணைந்து கொண்டு பாக்யராஜும் ஒற்றுமை, அது இது என பேசுகிறாரே என்ற விமர்சனம் எழுந்தது. மேலும் இப்படிப்பட்ட சூழலில் அதிமுகவின் இரு அணிகளையும் பாக்யராஜால் சேர்த்து வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.

பாக்யராஜ்
இதற்கெல்லாம் நடிகர் பாக்யராஜ் தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில் ஓபிஎஸ்ஸிடம் இருந்து எனக்கு இரு முறை போன் வந்தது. அப்போதெல்லாம் நான் ஊரில் இல்லை. அதனால் சென்னை வந்ததும் நான் ராயப்பேட்டையில் உள்ள ஹோட்டலுக்கு வருகிறேன் என ஓபிஎஸ் தரப்பிடம் கூறினேன்.

10 நிமிடங்கள் பேச்சு
அதன்படி நான் அங்கு சென்றேன். அப்போது 10 நிமிடங்கள் பேசினோம். இதையடுத்து ஓபிஎஸ், என்னிடம் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரங்களை செய்து அதன் வெற்றிக்காக பாடுபட்டீர்கள். தற்போது நீங்கள் ஏன் அதிமுகவுக்கு வரக் கூடாது என கேட்டார்.

ஒற்றுமை
அதற்கு நானும் அதற்கென்ன வந்துவிட்டால் போது! அதிமுக ஒற்றுமைக்கு கடைசி தொண்டன் என்ற முறையில் பாடுபடுவேன் என தெரிவித்தேன். உடனே ஓபிஎஸ்ஸுடன் இருந்தவர்கள், பாக்யராஜ் நம் அணியில் இணைவதாக அறிவித்துவிட்டார என ஆதரவாளர்களிடம் கூறிர். அவர்கள் அவ்வாறு வெளியே கூறினர். பேசி முடித்துவிட்டு வெளியே வந்தேன்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
அப்போது அதிமுகவில் இணைவதை செய்தியாளர்களிடம் தெரிவித்துவிடுங்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதன்படி செய்தியாளர்களிடம் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். கட்சியின் ஒற்றுமைக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்று இருவரிடமும் பேச நினைத்தேன். ஓபிஎஸ்ஸை சந்தித்து போல் இபிஎஸ்ஸையும் சந்திப்பேன் என கூறியிருந்தேன்.

உறுப்பினரே கிடையாது
மற்றபடி நான் கட்சியில் இணையும்படி அங்கு செல்லவில்லை. நான் மரியாதை நிமித்தமாக சந்திக்க வருவதை கூறியவுடன் ஓபிஎஸ் அங்கு ஆதரவாளர்களை சேர்த்துவிட்டார். நான் அதிமுக உறுப்பினர் கூட இல்லை என பாக்யராஜ் பேட்டி அளித்திருந்தார்.
-
காத்து எங்க பக்கம் வீசுது.. கையை உயர்த்திய சண்முகம்! கைகோர்த்த வேலுமணி! எடப்பாடிக்குத் தான் சிக்கலே! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!












Click it and Unblock the Notifications