மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும்.. நடிகர் அரவிந்த்சாமியின் தந்தை டெல்லி குமார்
சென்னை: நடிகர் டெல்லி குமார் பல வெற்றி பெற்ற சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார்.
அதிலும் மெட்டி ஒலி சீரியலில் 5 பெண்களின் தந்தையாக இவர் நடித்து பலருடைய மனதை கவர்ந்தவர். ஆனால் சமீப காலமாக எந்த சீரியலிலும் திரைப்படங்களிலும் டெல்லி குமார் நடிக்காமல் இருந்து வருகிறார். அதுகுறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு தான் மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடிகர் டெல்லி குமார் சித்தி, மெட்டிஒலி, பொம்மலாட்டம், தலையணை பூக்கள், பாண்டவர் இல்லம் என பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் வெள்ளி திரையில் டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், சிங்கம் என பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு வயதான அப்பா சாந்தமானவராகவும் அதே நேரத்தில் கோபம் வந்தால் கொதித்து எழுப்பவராக இருக்கும் கேரக்டரில் டெல்லி குமார் இதுவரைக்கும் நடித்து வந்திருக்கிறார்.
இவருடைய நடிப்பில் வித்தியாசமாக இருந்தது என்றால் அவர் கடைசியாக நடித்த பாண்டவர் இல்லம் சீரியல் தான். இந்த சீரியலில் இவரை சுற்றி தான் கதை நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று இவர் காசிக்கு போய் இருப்பது போன்று கூறிவிட்டு பிறகு சீரியலில் இவர் காணவில்லை. சில வருடங்கள் கடந்த பிறகும் இவருடைய கேரக்டருக்கு பதிலாக வேறு எந்த கேரக்டரும் மாற்றப்படவும் இல்லை. அதே நேரத்தில் இவருடைய கேரக்டர் குறித்து எந்த அறிவிப்பும் விடாமல் இருக்கின்றனர்.
அதற்குப் பிறகு சில வருடங்களாக சினிமாக்களிலும் திரைப்படங்களிலும் முகத்தை காட்டாமல் இருந்த டெல்லி குமார் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கிறார். அதில் தான் மீண்டும் சீரியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அத்தோடு தான் பாண்டவர் இல்லம் சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் அந்த நேரத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனக்கு வயது 60 வயதுக்கு மேலே ஆகிவிட்டதால் நீங்கள் ஒரு வருடம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

அது குறித்து நான் சீரியல் இயக்குனரிடம் சொல்லும்போது அவர் அப்ப நீங்க தாராளமா ரெஸ்ட் எடுங்க என்று சொல்லிவிட்டார். நான் எனக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஆனால் அதுவும் வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார். இத்தனை நாட்களாக என்னுடைய கேரக்டர் இல்லாத படி தான் கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஒரு சில வாரங்களில் என்னுடைய கேரக்டர் வரும் என்று நினைக்கிறேன். ஆனால் காசிக்கு போயிருந்த நான் இனி எந்த மாதிரி சீரியலில் வரப்போகிறேன் என்பது எனக்கு தெரியாது.
காசியில் இருந்து திரும்பி வரும் என்னுடைய கேரக்டர் குறித்த பெரிய எதிர்பார்ப்பு சீரியலில் வைத்திருப்பார்கள். ஆனால் எப்போதிலிருந்து வருகிறேன் என்று தெரியவில்லை என்று டெல்லி குமார் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். ஏற்கனவே சமீப காலமாக பாண்டவர் இல்லம் சீரியல் கதை ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லாமல் போர் அடிக்கிறது என்று கூறிவரும் நிலையில் இனி டெல்லி குமாரின் என்ட்ரியால் மீண்டும் சூடு பிடிக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications