Ramesh Khanna: எம்ஜிஆர் எனக்கு சகலை! ஜானகி எனக்கு முறைப்பெண்! நிஜமாத்தான் சொல்றாரா ரமேஷ் கண்ணா!
சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டியது, அவர் எனது முறைப்பெண் என இயக்குநரும் நடிகருமான ரமேஷ் கண்ணா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், கதாசிரியர், காமெடியன் என பன்முகத்திறமையை கொண்டவர் ரமேஷ் கண்ணா. கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குநராக பணியாற்றினார். அப்போது நிறைய படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் எம்ஜிஆரின் சகலை என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜானகியின் உறவினரைத்தான் எனது தங்கை திருமணம் செய்துள்ளார். அதற்கு முன்பே அவர் எங்களுக்கு உறவினர். அதாவது ஜானகி என் அப்பாவின் அக்காள் மகள்.
அதாவது எனக்கு அத்தை மகள், முறைப்பெண். ஜானகியை நான் திருமணம் செய்திருக்க வேண்டியது, ஆனால் எம்ஜிஆர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் எனக்கும் ஜானகிக்கும் பெரிய வயது வித்தியாசம் இருந்தது. அப்போது எங்கள் குடும்பத்திற்கும் அத்தை குடும்பத்திற்கும் பிரச்சினை இருந்தது.
இதனால் எம்ஜிஆர், ஜானகியை திருமணம் செய்ய எனது அப்பா ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களின் திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்று, அவர்கள் இருவரும் 14 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழக் கூடாது என்ற உத்தரவையும் பெற்றார். அதன் பின்னரும் இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.
இருவரும் கணவன்- மனைவியாக வாழலாம் என்பதை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது 1962 ஆம் ஆண்டுக்கு பிறகுதான். எனது அப்பாதான் கும்பகோணத்தில் இரு்து ஜானகியின் 13 ஆவது வயதில் அவரை அழைத்து நடனம் சொல்லிக் கொடுத்து, நடிப்பு சொல்லிக் கொடுத்து ஸ்டாராக மாற்றினார்.
எம்ஜிஆரின் "நான் ஏன் பிறந்தேன்" புத்தகத்தில் எனது அப்பா குறித்து எழுதியிருந்தார். அதில் guardian என குறிப்பிட்டிருந்தது என் அப்பாவைத்தான். என் அப்பாவிடம் ஜானகியை எம்ஜிஆர் பெண் கேட்டு வந்த போது, எனது அப்பா கால் மீது கால் போட்டுக் கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு பேசினார். இவ்வாறு ரமேஷ் கண்ணா தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
சென்னையை சேர்ந்த ரமேஷ் கண்ணாவுக்கு தற்போது 70 வயதாகிறது. இவர் நடிகர் ஆர்.எஸ்.மனோகரின் நாடகப் பட்டறையில் நடித்தவர். இவர் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்" படத்தின் மூலம் நகைச்சுவை நடிகனாக அறிமுகமானார்.
பின்னர் "உன்னை நினைத்து", "பிரெண்ட்ஸ்", "படையப்பா", "வில்லன்", "வரலாறு", "ஆதவன்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரமேஷ் கண்ணாவுக்கு ஜஷ்வந்த் கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் விஜய் நடித்த சர்கார் படத்தில் நடித்திருந்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications