Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பற்றி நடிகர் கார்த்தி ட்வீட்.. 'கடைகுட்டி சிங்கம்' கருத்து என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை, நடிகர் கார்த்தி வரவேற்றுள்ளார்.

Recommended Video

    பின்வாங்கிய மத்திய அரசு.. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன?

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சிகளில் தோன்றி நேரலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார் . அப்போது கடந்த வருடம் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது என்ற போதிலும் கூட ஒரு பிரிவினருக்கு அதை புரியவைக்க முடியவில்லை என்பதால் மூன்று விவசாய சட்டங்களையும் வாபஸ் பெறுகிறோம் என்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    இருவேறு கருத்துக்கள்

    இருவேறு கருத்துக்கள்

    காங்கிரஸ் தலைவர்கள் இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி , அரசுக்கு கிடைத்த தோல்வி என்று கூறி வருகிறார்கள். ஆனால் உத்தரபிரதேசம் , பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வருவதால் இதை ஒரு ராஜதந்திர நடவடிக்கை என்று பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

    கார்த்தி ட்வீட்

    கார்த்தி ட்வீட்

    மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும். இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.

    கடைக்குட்டி சிங்கம்

    கடைக்குட்டி சிங்கம்

    கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் விவசாயியாக நடித்தவர் கார்த்தி. தனது மோட்டார் சைக்கிளில் விவசாயி என்று எழுதி வைத்திருப்பார் . வேறு தொழில் செய்பவர்கள் இவ்வாறு பெயர் பலகை வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுகிறார்கள் விவசாயிகள், பிறருக்கு சோறு போட்டு வாழ வைப்பவர்கள். எனவே பெருமிதத்துடன் இப்படி எழுதி வைக்கலாம் என்று அந்தப் படத்தில் அவர் கூறியிருந்தார் . இதன்பிறகு கிராமப்புறங்களில் பல இளைஞர்கள் இதுபோல தங்கள் இருசக்கர வாகனங்களில் விவசாயி என்று எழுதிக் கொண்டு வண்டி ஓட்டுவதை பார்க்க முடிகிறது.

    சூர்யா கருத்துக்கள்

    சூர்யா கருத்துக்கள்

    நடிகர் கார்த்தி அண்ணன் நடிகர் சூர்யா பல்வேறு சமுதாய கருத்துகளை கூறி வருபவர். திரைப்படங்களிலும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். காப்பான், என்.ஜி.கே உள்ளிட படங்கள் இதற்கு உதாரணம். ஒரு பக்கம் ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக பாஜக, பாமக உள்ளிட்ட பிரமுகர்களால், தொடர்ந்து சூர்யா விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார் . இந்த நிலையில் மத்திய பாஜக அரசு எடுத்துள்ள முடிவு தொடர்பாக நடிகர் கார்த்தி ட்வீட் வெளியிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+