வானதி சீனிவாசனிடம் தோற்ற காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல கமல்:'விக்ரம்' குறித்து கஸ்தூரி
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் பாடிய ஒன்றிய பாடல் குறித்து நடிகை கஸ்தூரி தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள படம் விக்ரம். இதன் இயக்குநர் லோகே கனகராஜ். திமுக எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விக்ரம் திரைப்படத்தை வெளியிட உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது. .

இந்த பின்னணியில் விக்ரம் படத்தில் ஒரு பாடலின் முதல் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டது. பத்தல பத்தல என்ற பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். அதிலும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பாடல் எழுதியுள்ளார் கமல்ஹாசன்.

இதில்,
கஜானாலே காசில்லே!
கல்லாலையும் காசில்லே!
காய்ச்சல் ஜூரம் நிறைய வருது தில்லாலங்கடி தில்லாலே!
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே!
சாவி இருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே!
என நீள்கிறது வரிகள்.
இந்த பாடல் இப்போது அரசியல் விவாதமாகிவிட்டது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்துகின்றன. இப்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் ஒன்றியம் என்ற சொல்லை தனது சினிமாவில் பயன்படுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல்
வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல.
ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல.
கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு!
இவ்வாறு நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
அப்புறம் என்ன! வழக்கம் போல விடிய விடிய கச்சேரிதான் ட்விட்டரில்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications