1000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு பிரதமர் மோடி சொன்னப்ப.. அதுக்கு தைரியம் வேணும்.. மாரிமுத்து சல்யூட்
சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவிக்க ஒரு தைரியம் வேண்டும். அது எவ்வளவு பெரிய அறிவிப்பு ஆபரேசன் செய்தால் வலிக்கத்தான் செய்யும் என்று மறைந்த நடிகர் மாரிமுத்து கூறியுள்ளார். இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் நரேந்திரமோடி சிறப்பானவர் என்பது என்னுடைய கருத்து என்றும் மறைந்த நடிகர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் மாரிமுத்து தொலைக்காட்சி சேனல்கள், யுடுயூப்களில் அளித்த பேட்டிகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அவர் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி பற்றியும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றியும் அதற்கு அவர் ஆதரவாக பேசியது பற்றிய வீடியோ பாஜகவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் நரேந்திரமோடி சிறப்பானவர் என்பது என்னுடைய கருத்து. எவ்வளவு பாயிண்ட் உயர்ந்தவர் என்பதற்கு என்னிடம் அளவு கோல் கிடையாது. இவருடைய ஆட்சி சிறப்பான ஆட்சியாக இருக்கிறது. மிகவும் போல்டாக ஒரு முடிவு எடுக்கிறார். அவர் பிரதமர் அவர் போடும் சட்டை, அவர் பறக்கும் விமானத்தை கிண்டல் செய்யக்கூடாது. பிரதமர் அப்படித்தான் சட்டை போடுவார்.
நானே 40 அல்லது 50 சட்டை வைத்திருப்பேன். அப்போ பிரதமர் எத்தனை சட்டை வைத்திருப்பார். டிஜிட்டல் இந்தியாவாக ஆக்குவேன் என்று சொன்னார் அதை நிறைவேற்றி விட்டார். வெற்றிகரமாக டிஜிட்டல் இந்தியாவை கொண்டு வந்து விட்டார். இதில் மதம், ஜாதி, கட்சி எல்லாம் பார்க்கக் கூடாது. நான் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுவேன். எனக்கு கட்சியே கிடையாது. நான் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கு ஓட்டு போடுவேன்.
பண மதிப்பிழப்பு சமயத்தில் நிறைய பேர் உயிரிழந்தார்களே என்று பேட்டி எடுப்பவர் கேட்டதற்கு, வயதானவர்கள் ஏன் வரிசையில் போய் நிற்கவேண்டும்? பிள்ளைகள், பேரன் பேத்திகள் போயிருக்கலாமோ? நான் அரசியல் பேசவில்லை, வயதானவர்கள் போய் வரிசையில் நின்றால் மயங்கி விழத்தான் செய்வார்கள். சுகர் அதிகமாக இருக்கத்தான் செய்யும். நீங்கள் ஏன் போய் வரிசையில் நிற்க வேண்டும் பேரன் பேத்திகளை அனுப்பியிருக்கலாமே

45 நாட்கள் அவகாசம் கொடுத்துதான் பணத்தை செல்லாது என்று சொன்னார்கள். என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் வங்கியில் போய்தான் மாற்றினேன். டீமானிடைசேசன் அறிவித்த பிறகு சம்பள பணத்தை கையில் கொடுத்தார்கள். எல்லாம் செல்லாத நோட்டுதான். அதையும் வாங்கி நான் வங்கியில் கொடுத்துதான் மாற்றினேன். அப்படித்தான் புரட்சி பண்ண முடியும்.
ஹார்ட் ஆபரேசன் செய்யணும் என்றால் நெஞ்சை பிளக்க வேண்டும் ரத்தம் கொட்டத்தான் செய்யும். வலிக்கும் என்று நினைத்தால் இதய ஆபரேசன் எப்படி செய்ய முடியும். அப்படித்தான். அதுவும் வைத்தியம்தான் திடீர் என்று நடந்ததுதான். நடந்திருச்சி. ஒரு ப்ரைம் மினிஸ்டர் திடீர்னு 8 மணிக்கு அறிவிக்கிறார். அதைக்கேட்டு டோட்டல் இந்தியாவும் இந்தியாவை சார்ந்த இதர நாடுகளும் ஆடுது சார். எட்டரை மணிக்கு பூமி ஆடுது சார்.. எவ்வளவு பெரிய அறிவிப்பு சார். அதுக்கு எவ்வளவு பெரிய தைரியம் வேண்டும் அவரை நீங்க சல்யூட் அடிக்கணும் சார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications