Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சந்திரயான் 3.." பிரகாஷ் ராஜ் பதிவிட்ட படம்.. இப்படியா விமர்சிப்பாங்க.. கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரயான் 3 விண்கலம் திட்டம் குறித்து விமர்சனம் செய்யும் வகையில் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

நிலவு குறித்த ஆராய்ச்சில் முக்கிய மைல் கல் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் திட்டம் சந்திரயான் 3.. ஏனெனில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இருந்தாலும் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வு மேற்கொண்டது இல்லை. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

Actor Prakash Raj tweet about Chandrayaan 3 stir Controversy, Netizens Slams

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் பூமியை சுற்றி வந்த 'சந்திரயான்-3' கடந்த 1-ந் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து வெளியேறியது. தொடர்ந்து நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 3 தொடங்கியது. கடந்த 17-ந் தேதி நிலவின் தரையில் இருந்து 153 கி.மீ. உயரத்தில் 'சந்திரயான்-3' சுற்றி வந்தது.

அப்போது, விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து 'விக்ரம் லேண்டர்' கருவி பிரிக்கப்பட்டது. தற்போது நிலவுக்கு நெருக்கமாக சுற்றி வரும் விக்ரம் லேண்டர் வரும் 23 ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் தரையிறங்க உள்ளது. தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முயற்சியில் இந்தியாவை முந்திக் கொண்டு செல்ல ரஷ்யா முயற்சித்தது. ராக்கெட்டை மின்னல் வேகத்தில் செலுத்தி நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைத்ந்தது.

ஆனால் இறுதி கட்டத்தில் பின்னடைவை சந்தித்த லுனா 25 விண்கலம் தோல்வியில் முடிந்தது. இதனால், இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தை உலக நாடுகள் உற்று கவனித்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது. இந்தியா நிகழ்த்த போகும் இந்த சரித்திர சாதனையை அனைவரும் எதிர்பார்த்து உள்ள நிலையில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்ஜின் சமூக வலைத்தள பதிவு விமர்சனங்களை சந்தித்துள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில், "வாவ்... நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என கேப்ஷன் பதிவிட்டு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே சிவன் டீ ஆற்றுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். #justasking என்ற ஹேஷ்டேக்குடன் இதை பிரகாஷ் ராஜ் பதிவிட்டு இருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரக்கூடியவர்.

இந்த நிலையில், மோடியை விமர்சிக்கும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தை கேலி செய்து இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் பிரகாஷ் ராஜ்ஜின் கருத்தை சாடி வருகின்றனர். இந்தியாவின் கனவுதிட்டத்தை அரசியலுக்காக இப்படி விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் சாடியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+