Neeya Naana: தெருநாய்க்கு நான் எம்.ஆர்.ராதா புள்ளைனு தெரியுமா? என்னை கடிக்காம விடுமா? ராதாரவி கலகல
சென்னை: நாய் நன்றியுள்ளதுதான், இல்லை என நான் சொல்லவில்லை. நானே ரோட்டில் தனியா போனா நாய் கடிச்சிடுமோனு பயமாதான் இருக்கும். ஏன்னா அதுக்கு நான் எம்.ஆர்.ராதா புள்ளையா? சங்கத் தலைவரானு தெரியுமா என நடிகர் ராதாரவி கலகலப்பாக பேசியிருந்தார்.
தெருநாய்கள் அதிகரித்து, அவை பெரியவர்கள், சிறியவர்களை கடிப்பதால் அவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் தெருநாய்களுக்கு ஆதரவானர்களும் அதை எதிர்ப்போரும் தங்கள் வாதங்களை முன் வைத்து வருகிறார்கள்.

தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் நீயா நானா எனும் நிகழ்ச்சியில் நடிகை அம்மு, படவா கோபி உள்ளிட்டோர் தெருநாய்களுக்கு ஆதரவாக பேசியிருந்தனர்.
நீயா நானா
இந்த நிகழ்ச்சியில் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது உறவினர்களை இழந்தவர்கள் என கலந்து கொண்டனர். அவர்கள் நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடந்தது.
அம்முவுக்கு அறிவுரை
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதா ரவி பேசுகையில், "அம்முவுக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இந்த நாயை விட்டால் என்ன, பிடித்தால் என்ன, நீ எதற்கு அந்த விவாதத்திற்கு சென்றாய்?
நாய் நன்றி உள்ளது
நாய் விவகாரத்தை கவனிக்காமல் விட்டால் அது அப்படியே இருக்கும். இப்போதெல்லாம் நாய்க்காக மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள். மனிதர்கள் கொடுப்பதில்லை. நாய் நன்றி உள்ளதுதான் இல்லை என சொல்லவில்லை. ஆனால் அதை ஹீரோ ஆகிட்டாங்க.
எம்.ஆர். ராதா புள்ளை
நானே ரோட்டில் தனியா போனா நாய் கடிச்சிடுமோனு பயமாதான் இருக்கும். ஏன்னா அதுக்கு நான் எம்.ஆர்.ராதா புள்ளையா, சங்கத் தலைவரானு தெரியுமா? நாய் கடித்தால் மட்டுமில்லை , பூனை கட்டித்தாலும் ரேபிஸ் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ரேபீஸ் ஊசி
ஊசி போட்டு ரேபிஸிலிருந்து நம்மை தற்காப்பு செய்யலாம் என கூறப்படுகிறதே, ஆனால் எத்தனை நாய்க்கு ஊசி போட முடியும்? அதன் எச்சில் பட்டாலும் ரேபிஸ் வரும் என்கிறார்கள். தெரு நாய்களை பிடிக்கக் கூடாது என சொல்பவர்கள் யாரும், அந்த நாய்களை காப்பாற்ற போவதில்லை. இது அம்முவுக்காக இல்லை, பொதுவாக நான் சொல்லும் கருத்து" என ராதாரவி தெரிவித்தார்.
எஸ்.வி.சேகர் பேசியது என்ன
இந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் பேசுகையில், இதுபோன்ற நாய்கள் தொடர்பான தனியார் விவாத நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளும்போது வெறும் அரை மணி நேரம் மட்டும் கலந்து கொண்டிருக்க வேண்டும். அதுவும் நேரலையில் பேசியிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் தான் இப்படிப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருக்கிறீர்கள்.
மூன்று நாய்கள்
நான் என்னுடைய வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வருகிறேன். அவைகளுக்கு உணவளிக்கும்போது தெரு நாய் வந்தால் அதற்கும் நிச்சயம் உணவளிப்பேன். அது என்னுடைய விருப்பம். இருப்பினும் நாய்கள் மனிதர்களை கடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.
ஆதார் அட்டை
எஸ்.வி.சேகர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், இரவு 9 மணிக்கு மேல் நாய்கள் இருக்கும் தெருவுக்குள் போக கூடாது என பேசுகிறார்கள். அதற்காக நான் இந்த தெருதான் என ஆதார் அட்டையை காட்டிவிட்டா செல்ல முடியும்? இதை நாய் ஏற்றுக்கொண்டு என்னை குரைக்காமல் விட்டுவிடுமா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications