திமுகவில் திருப்தி இல்லை... அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி பேட்டி
Recommended Video
சென்னை: அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன் ஆனால், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் நடிகர் ராதாரவி இணைந்தார். ராதாரவி அதிமுகவில் இணைந்த போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.

திரையுலகில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பல விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பவர் நடிகர் ராதாரவி. சமீபத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது
மூத்த நடிகரான ராதாரவியின் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதன் எதிரொலியாக, தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் நடிகர் ராதாரவி இணைந்துள்ளார். இதை அதிமுக, அதிகாரப்பூர்வ அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. அதிமுகவில் இணைந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன். ஆனால், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications