Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் ராதாரவி.. "பாஜக ராதாரவி"யின் அநாகரீகம் + "ஆபாச வார்த்தை".. கடுப்பில் திமுக.. நெளியும் இணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக விழுமியங்களும், சோசலிச அபிமானமும், பெரியாரின் துருவேறாத போர்வாள் என்று கருதப்பட்ட நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகனா? இப்படி பேசியது என்று அதிர்ந்து போயிருக்கின்றன திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள்..

எல்லா கட்சிகளிலும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, தற்சமயம், பாஜகவில் ஐக்கியமாகி இருப்பவர் ராதாரவி.. நேற்றைய தினம் பாஜக கூட்டத்தில், இவர் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. அதன் சுருக்கம் இதுதான்:

Actor Radharavi slams dmk government and criticized minister senthil balajis health condition

"முதல்முதலாக யாரை பிரதமராக போடலாம்னு ஒரு பேச்சு வந்தது.. 15 முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெயரை எழுதிக்கொடுங்கன்னு சொன்னாங்க.. அதன்படியே 15 பேரில், மொத்தம் 13 பேர், ஐயா வல்லபாய் படேல் பெயரை பிரதமர் பதவிக்கு எழுதி குடுத்தாங்க.. முதல் பிரதம மந்திரியே அவர்தான்..

உல்டா உல்டா: ஆனால், உல்டா உல்டா பண்ணி, அவரை விட்டுக்கொடுக்கணும்னு நெருக்கி கேட்டாங்க.. வல்லபாய் படேலும் ஒரு இளிச்சவாயன்.. சரி சரின்னு விட்டுக்கொடுத்துட்டார்.. உடனே நேரு பிரதமராக வந்துட்டாரு. இவர் மட்டும் விட்டுக்கொடுக்கலேன்னா, நேருவுக்கு பிரதமர் ராசியே கிடையாது.

அந்த சிலையை கொண்டுவந்து, மோடிஜி இப்போது வைத்தால், இவங்க எல்லாம் திரண்டு வந்து கேள்வி கேட்கறாங்க.. பல நல்ல விஷயங்களை வெளியே கொண்டுவருவதே பிஜேபி மட்டும்தான்.. 9 வருஷமா மோடிஜி இருந்திருக்கிறார்.. ஐயா அமித்ஷாவே ஆகட்டும்.. இவங்க 2 பேரையும் பார்த்து, ஊழல் செஞ்சிருக்கீங்கன்னு ஒரே ஒரு பைசா காட்டுங்களேன் பார்ப்போம்.. மோடி ஐயாவும், அமித்ஷாவும் ஊழல் செய்யாதவங்க..

நல்ல நண்பன்: ஆனால், இந்தபக்கம் 30 ஆயிரம் கோடிக்கு ஊழல் பண்ணி வெச்சிருக்காங்களாம்.. செந்தில் பாலாஜின்னு ஒரு மனுஷன் பாவம் மாட்டிக்கிட்டு தவிக்கிறாரு. என் நல்ல நண்பன் அவர்.. வருத்தமா இருக்கு.. அவர் நடிக்கிறாருன்னு சொல்றாங்க.. அப்பறம் பைபாஸ் ஆபரேஷன்னு சொல்றாங்க. கட்சியில் போய் சேர்ந்ததுக்கு, பைபாஸ் ஆபரேஷன்.

உன்னை போலீஸ் பிடிச்சாங்களே, அப்பவாவது ஒயின்ஷாப்பில் 10 ரூபாய் குறைச்சாங்களா? குறைக்கவேயில்லை.. அது அப்படியே தொடரும்.. அதுக்கு இன்னொரு அமைச்சரை பிடிக்கணும்.. கப்பம் தொடரணும். செந்தில் பாலாஜியை 3 மாசத்துக்கு முன்னாடியே அமலாக்கத்துறை பிடிச்சிருந்தால், கரண்ட் விலை ஏறியிருக்காது.. 3 மாசத்துக்கு முன்னாடியே பிடிச்சிருந்தால், நமக்கு எல்லாம் லாபம் வந்திருக்கும்..

அமைச்சர் நேரு: காவேரி மருத்துவமனையில் இப்போ இருக்காரு.. அந்த ஆஸ்பத்திரி, நேரு அண்ணனுடைய ஆஸ்பத்திரின்னு சொல்றாங்க.. பேப்பரில் படிச்சேன்.. செந்தில் பாலாஜி காவேரி ஆஸ்பத்திரியில் இருந்தால் என்ன? அவர் முதல்ல "வெளியே வர்றாரா"ன்னு பாருங்க. அதாவது, வெளியே வந்து எட்டிப்பார்க்குறாரா பாருங்கன்னு சொல்றேன்..

ஏன்னா, ஊழல் செய்வதாகட்டும், ஆளுங்களை க்ளோஸ் செய்வதாகட்டும், திமுகவுக்கு அத்துப்படி. ஆனால் தம்பி ஸ்டாலினை மட்டும் தப்பு சொல்லாதீங்க.. அவருக்கு ஒன்னுமே தெரியாது. அவர்கிட்ட கத்தியை கையில் தந்து, இப்படிதான் 'சதக் சதக் சதக்'-ன்னு குத்தணும் சொல்லி தரணும். அதுக்குப்பிறகுதான், ஓ அப்படியா-ன்னு கேட்டுட்டு அதன்படியே செய்வார்.. ஏன்னா, அதுவே அவருக்கு தெரியாது.. நல்ல புள்ள அவர்.. கலைஞர் அவரை லொடக்குன்னு விட்டுட்டு போயிட்டாரு. அவர் மட்டும் தன்கூடவே வெச்சிருந்து டிரெயினிங் தந்திருந்தால், பிரமாதமா இருந்திருக்கும்.

சகோதரர் ஸ்டாலின் மீது ஊழல் சொல்லவே முடியாது. ஏன் என்றால், அவர் பல லட்சம் கோடிக்கு அதிபதி.. இதைத்தான் முதல்ல இருந்து நான் சொல்லிட்டு இருக்கேன். அவர் ஏன் திருடணும்? ஸ்டாலினுக்கு அரசியல் தெரியலேன்னு சொன்னால் ஒத்துக்கொள்வேன். ஆனால், பணம் திருடினார் என்று சொன்னால், நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். இதோ இங்கே சகோதரர் அண்ணாமலையை வெச்சிக்கிட்டே இதை சொல்றேன்... ஸ்டாலின் அவர்கள் ஊழல் செய்தார் என்று நீங்கள் சொல்லக்கூடாது.

ஊழல் பணம்: ஏன்னா, இனி ஊழல் செய்து, அந்த பணத்தை வைப்பதற்கு அங்கே இடமில்லை.. எங்கேதான் வைப்பாங்க.. பணம் வைக்க இடமே இல்லை. வெளிநாட்டில் எங்கே கொண்டுபோய் வைப்பது என்று, மேப் வெச்சிக்கிட்டு இடத்தை தேடுறாங்க.. எல்லா நாட்டிலயும் ஊழல் செய்த பணத்தை கொண்டுபோய் வெச்சிச்சாச்சு.. இப்போ சந்திரமண்டலத்துல கொண்டுபோய் பணத்தை வெக்கலாமா?ன்னு பார்க்கிறாங்க.. அங்கேயும் கொண்டுபோய் இவங்க வைப்பாங்க.. அப்படி வைத்தாலும், நம்ம மக்கள் ஆ-ன்னு சிரிச்சிட்டு அதையும் பார்ப்பாங்க.

மவுன புரட்சி: இந்த மக்களை திருத்தவே முடியாது.. மவுன புரட்சி செய்கிறார்கள் மக்கள் என்றார்கள்.. ஒரு ம'''-ம் கிடையாது.. அதனால் நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்.. ஏன்னா, மக்கள் நடிப்பையே ரசிப்பவர்கள். இவங்களும் நடிக்க தெரிந்தவர்கள். இந்த தேர்தலில் பாஜக மட்டும் ஜெயிக்கலேன்னா, நாம எல்லாரும் நாசமா போயிடுவோம்.. இந்த தமிழ்நாடே அவ்வளவுதான்.. நம்ம வேலை, ஐயா அமித்ஷா சொன்னதுபோல 25 சீட் ஜெயிச்சாகணும்.

திட்டக்கூடாது: 25 சீட் மனசுல வெச்சுக்கிட்டால், 20 சீட்டாவது ஜெயிப்போம். கல்யாணம் ஆனதும், இரட்டை குழந்தை பிறக்கணும் குறிக்கோளை வைத்துக்கொண்டால், ஏதோ ஒற்றை பிள்ளையாவது பிறக்கும். கிறிஸ்தவ மக்கள், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லை என்றெல்லாம் சொல்லாதீங்க.. இவர்களை எல்லாம் அரவணைத்து செல்ல வேண்டும். அனைவருமே நமக்கு சகோதரர்கள்தான்.. அவங்களை எல்லாம் திட்டக்கூடாது.. ஆறறிவு உள்ளவர்கள் நிச்சயம் பிஜேபிக்குதான் வாக்களிப்பார்கள் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+