வயசு கம்மிதான்.. யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் - காரணமே வேற
சென்னை: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜெயிலர் திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழ்நாடு மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிப் படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு என்னுடைய நன்றி." என்றார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது ஏன்? என நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், "வயது குறைவானவர்களாக இருந்தாலும், யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை நட்பு அடிப்படையில் மட்டுமே நான் சந்தித்து பேசினேன்." என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, "அரசியல் வேண்டாம்." என்று அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், அவர் இமயமலைக்கு யாத்திரை சென்றார் அங்கிருந்து ஜார்க்கண்ட் சென்ற அவர், அங்கு ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆளுநர் மாளிகைக்கே நேரில் சென்று சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசத்துக்கு சென்ற ரஜினிகாந்த், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் அமர்ந்து ஜெயிலர் படம் பார்க்கப்போவதாக செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் ரஜினியுடன் ஜெயிலர் படம் பார்க்க யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை என்று தகவல் வெளியானது.

அவருக்கு மாற்றாக உபி துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ரஜினிகாந்துடன் திரைப்படத்தை பார்த்தார். அவரும் முழு படத்தையும் பார்க்காமல் அங்கிருந்து பாதியிலேயே கிளம்பினார். இந்த நிலையில் படம் பார்த்த பின் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு சென்றார்.
அவரை வரவேற்க வீட்டு வாசலுக்கு வந்த யோகி ஆதித்யநாத்தை கண்ட காரில் இருந்து கீழே வேகமாக இறங்கிய ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த வீடியோ வெளியானதை அடுத்து பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள். தன்னை விட வயது குறைந்தவரின் காலி விழுந்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதில் அரசியல் பின்னணி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரஜினிகாந்த் வேறொரு காரணத்தை கூறியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications