கோவை செல்லும் ரஜினிகாந்த்.. ஷூட்டிங் எதுவும் இல்லையே.. வேறு எதற்கு தெரியுமா.. என்ன மேட்டர் பாருங்க
சென்னை: தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளைய தினம் கோவை செல்கிறார். அவர் எதற்காக திடீர் பயணமாகக் கோவை செல்கிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டராக வலம் வரும் ரஜினிகாந்த், நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஜெயிலர். அவரது முந்தைய படமான அண்ணாத்த திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தாத நிலையில், ஜெயிலர் படத்திற்கு அனைவரும் காத்திருந்தனர்.

ஜெயலிர் ஷூட்டங்கில் இருந்த சமயத்தில் அது குறித்து எந்தவொரு தகவலும் பெரிதாக வெளியாகவில்லை. படம் வெளியாக சில வாரங்களுக்கு முன்பு வரை கூட புரோமேஷன்கள் பெரியளவில் இல்லாமலேயே இருந்தது.
ரஜினிகாந்த்: இருப்பினும், படத்தின் டிரைலர் வந்த பிறகு அது முற்றிலுமாக மாறியது. ஒரே ஒரு டிரைலர் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறச் செய்தது. வழக்கமான ரஜினி படத்திற்கு ஏற்படும் எதிர்பார்ப்பு உருவானது. படம் ரிலீசுக்கு பிறகு, ரசிகர்கள் இதைக் கொண்டாடித் தீர்த்தனர். ரஜினி மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் என இருவருக்கும் இது ஒரு கம்பேக் திரைப்படமாகப் பார்க்கப்பட்டது.
படத்தில் வன்முறை சற்று அதிகமாக இருந்தாலும் கூட அனைத்து தரப்பு ரசிகர்களும் படத்தைக் கொண்டாடினர். ஜெயிலர் திரைப்படம் புது வசூல் சாதனையைப் படைத்தது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் கொண்டாடியது. ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருந்த் ஆகியோருக்கு தயாரிப்பாளர் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டது. மேலும், படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டும் வகையில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கோவை பயணம்: ஜெயிலர் படம் இப்படி வரலாறு படைக்கும் வெற்றியைப் படைத்த நிலையில், ரஜினி அடுத்துப் பட ஷூட்டிங்கில் இருக்கிறார். லால் சலாம் மற்றும் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 'தலைவர் 170' ஆகிய படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்தச் சூழலில் நாளைய தினம் நடிகர் ரஜினிகாந்த் கோவை செலவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் காலை கோவை செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எதற்குச் செல்கிறார்: ரஜினிகாந்த்தின் பேரனுக்கு காது குத்தி மொட்டை அடிக்கும் விழா, கோவை மாவட்டம் சூலுரில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ளச் செல்கிறார் ரஜினி கோவை செல்கிறார். ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்குக் கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்குத்தான் காது குத்தி மொட்டை அடிக்கும் விழா நடைபெறுகிறது. கோவை மாவட்டம் சூலூரில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள இரு வீட்டாரின் குடும்பத்தினரும் இன்று கோவைக்குச் சென்றுவிட்டனர். இந்தச் சூழலில் நாளை காலை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் கோவை செல்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications