கண் அடி ரொம்ப ஓவர்..ஆர்த்தியை விடுங்க! ரவி மோகனுக்கு முளைத்த புதிய சிக்கல்! எவ்வளவு தான் தாங்குவாரு?
சென்னை: நடிகர் ரவி மோகன், ஆர்த்தி, கெனிஷா விவகாரம் ஒருபுறம் போய்க் கொண்டிருக்க மற்றொரு சிக்கலும் ரவி மோகனுக்கு முளைத்திருக்கிறது. தற்போது கராத்தே பாபு படத்தில் ரவி மோகன் நடித்து வரும் நிலையில் அந்தப் படத்துக்கு அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கிய ரத்தீஷ் பண உதவி செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அந்த படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆகாஷ் பாஸ்கரனால், சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ் படத்துக்கு சிக்கல் முளைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமானாலும், ஆக்சன், காமெடி என கலந்து கட்டி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஜெயம் ரவி. எந்தவித சர்ச்சைகளுக்கும் ஆளாகாத தமிழ் சினிமாவின் நடிகர்களின் அவரும் ஒருவர். இந்த நிலையில் என்ன ஆனது என தெரியவில்லை கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் ஜெயம் ரவியின் பெயர் அடிபடுகிறது சாரி ரவி மோகனின் பெயர்.
ஜெயம் ரவி எனவே சினிமாவில் தொடர்ந்து வந்த அவர் சில சர்ச்சைகளுக்கு பிறகு தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டது கவனிக்கத்தக்கது.

ஜெயம் ரவியாக இருந்தபோது ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் அவரது மாமியாரின் தயாரிப்பில் சில படங்களில் நடித்திருந்தால் அந்த படங்கள் எல்லாம் தோல்வி என கணக்கு காட்டி தன்னை ஏமாற்றி விட்டதாக மாமியார் மீது பகீர் குற்றச்சாட்டு வைத்தார். மேலும் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்வதாகவும் அறிவித்தார். பிரபல பாடகியான கெனிஷாவுடன் ஜெயம் ரவிக்கு பழக்கம் இருப்பதாகவும் அதன் காரணமாகவே அவர் ஆர்த்தியை பிரிவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஜெயம்ரவி விவகாரத்தில் தன்னை இழுத்துப் பேச வேண்டாம் என கெனிஷா கூறியிருந்தார்.
அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் விவகாரம் ஓய்ந்திருந்தது. இதற்கிடையே ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் கெனிஷாவும் ரவி மோகனும் கலந்து கொண்டது பரபரப்பை மேலும் பற்ற வைத்தது. இதற்குப் பிறகு கெனிஷா, ஆர்த்தி ரவி, ரவி மோகன், ஆர்த்தியின் தாய் என தொடர்ந்து அறிக்கையை விட்டனர். இந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போக யாருமே இனி அறிக்கை விடக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
இதை அடுத்து அமைதியாக சென்று கொண்டிருக்கிறது ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம். இந்த நிலையில் ரவிமோகனின் சினிமா வாழ்க்கையிலும் பிரச்சனை முளைத்திருக்கிறது. அது ஏற்கனவே தமிழக அரசியலிலும் சினிமாவிலும் புயலை கிளப்பிய அமலாக்கத்துறை சோதனை விவகாரம் தான். பிரபல தொழிலதிபரான ரத்தீஷ், டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் அமலாக்கத்துறை சோதனை வளையத்தில் சிக்கி தற்போது தலைமறைவாக இருக்கின்றனர்.
ஒரே நேரத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி, தனுஷின் இட்லி கடை, சிம்புவின் ஒரு படம் என அடுத்தடுத்து தயாரிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு ஆச்சரியப்பட வைத்த ஆகாஷ் பாஸ்கரன், தற்போது தலைமறைவாகி இருக்கிறார். இதனால் அந்த படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே டாஸ்மாக் நிர்வாகத்துடன் மறைமுக தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ரத்தீஷ் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்ததாக புகார் எழுந்தது. பிரபல நடிகை ஒருவரை தொடர்பு படுத்தி நேரடியாகவே குற்றம் சாட்டப்பட்ட நிலையிலும் அந்த நடிகை இதுவரை விளக்கம் எதுவும் அளிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சரி, ரவி மோகனுக்கு என்ன பிரச்சனை என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. தற்போது வடசென்னை அரசியலை மையமாக வைத்து கராத்தே பாபு என்ற படத்தில் ரவி மோகன் நடிக்கிறார் இல்லையா, அந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு சென்னை எம்ஆர்சி நகரை சேர்ந்த தொழிலதிபர் ரத்தீஷ் பைனான்ஸ் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கான ஆவணங்கள் அமலாக்க துறையால் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அந்த நிறுவனத்திற்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ரவி மோகனிடமும் விசாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குடும்ப பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் ரவி மோகன் கராத்தே பாபு படம் தனக்கு ஓரளவு மன நிம்மதியை தரும் என எதிர்பார்த்து இருந்தார். இந்த நிலையில் அந்த படமும் அமலாக்க துறையால் சிக்கலில் சிக்கி இருக்கும் நிலையில் ரவி மோகன் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.











Click it and Unblock the Notifications