சரவணன் ரவுடியிஸம் செய்றாரு.. முகலிவாக்கம் வீடு என்னோடது.. டைவர்ஸே வாங்கலை.. முதல் மனைவி பரபரப்பு
சென்னை: நடிகர் சரவணனுக்கு பருத்தி வீரன் படத்திற்கு பிறகு பிச்சையெடுக்கும் நிலையில் இருந்தார் அவருக்கு நான் சோறு போட்டேன் என முதல் மனைவி சூர்யா ஸ்ரீ தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் விவாகரத்து வாங்காமலேயே அவர் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பருத்தி வீரன் படத்தில் சித்தப்புவாக நடித்த நடிகர் சரவணன் முகலிவாக்கத்தில் வீடு வாங்கிய போது தன்னை ஒரு புரோக்கர் ஏமாற்றிவிட்டதாக அமைச்சர் தாமோ அன்பரசன் புகார் கூறியிருந்தார். தனது கார்பார்க்கிங்கில் புரோக்கர் கடை கட்டிவிட்டார் என்றும் கூறியுள்ளார். ஆனால் அந்த கடை வீடு வாங்கும் போதிலிருந்தே இருந்தது என புரோக்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், போரூர் முகலிவாக்கத்தில் 2014 இல் இரு பிளாட்களை வாங்கினேன். லேக்வியூ அபார்ட்மென்டில் செண்பகராமன் என்பவரிடம் வாங்கியிருந்தேன்.இதை எனக்கு வாங்கிக் கொடுக்க வந்தவர் புரோக்கர் ராமமூர்த்தி.
4 பிளாக்குகளில் தலா 4 வீடுகள் இருந்தன. நான் இரு வீடுகளை வாங்கியதால் எனக்கு 2 கார் பார்க்கிங் இருந்தது. இரு வீட்டின் யூடிஎஸ் எனக்கு 700 அல்லது 800 சதுர அடி வரும். எனக்கு இரு மனைவிகள், எனக்கு முதல் மனைவியிடம் குழந்தை இல்லை என்பதால் 2015 இல் நான் மறுமணம் செய்து கொண்டேன். இரண்டாவது மனைவி வந்த பிறகு முதல் மனைவியுடன் எனக்கு தகராறு ஏற்பட்டதால் இந்த வீட்டுக்கே நான் வருவதில்லை.
நான் கொரோனா சமயத்திலும் முதல் மனைவியுடனான சண்டையிலும் நான் இல்லாததை பயன்படுத்தி ராமமூர்ததி என்பவர் கார் பார்க்கிங்கில் ஒரு கடையை கட்டி அதற்கு மின் இணைப்பையும் வாங்கிவிட்டதாகவும் அந்த இடத்திற்கு வரி கட்டி விட்டதாகவும் கூறியிருந்தார். அது போல் யூடிஎஸ் பகுதியும் அவருடையது எனக் கூறி என்னை ஏமாற்றி வந்தார்.
இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கக் கோரி அமைச்சர் தாமோ அன்பரசன் அண்ணனை நேரில் பார்த்து மனு கொடுத்தேன். அதற்காகத்தான் நான் வந்தேன். அந்த ராமமூர்த்தியின் மனைவி என் இடத்தில் இருந்து கொண்டு என்னை வெட்டுவேன் குத்துவேன் என்கிறார். ராமமூர்த்தி அவருடைய மனைவி ஜெயமணி ஆகியோர் பெயரில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
இதுகுறித்து நடிகர் சரவணனின் மனைவி, ராமமூர்த்தி, மனைவி ஜெயமணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் சரவணனின் மனைவி சூர்யாஸ்ரீ. அவர் சொல்வதெல்லாம் பொய், அவர் சொல்வதில் எதுவுமே உண்மை இல்லை. என்னையும் ஏமாற்றி நிறைய பிரச்சினைகளை செய்து வருகிறார்கள். ஒரு பெண்ணை வீட்டோட வைத்துக் கொண்டு என்னை டென்ஷன் செய்கிறார் சரவணன்.
எனக்கு விவாகரத்தே கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி இரண்டாவது மனைவி வருவாங்க. அவர் அந்த பெண்ணை வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொன்ன முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை. அவர் ரவுடியிசம் செய்கிறார். அந்த வீட்டை நான் காசு கொடுத்து வாங்கினேன். நான் சம்பாதித்த காசில் அவர் பெயரில் நான் வாங்கினேன். அதுதான் நான் செய்த தவறு.
அவர் 12 லட்சம் ரூபாய் நான் கட்டினேன். மீதமுள்ள 36 லட்சம் பணத்திற்கு லோன் போட்டுள்ளேன். அதற்கு இஎம்ஐ நான் கட்டி வருகிறேன். என்னை காதலித்து கல்யாணம் செய்து ஏமாற்றிவிட்டார், பருத்தி வீரன் படத்திற்கு பிறகு பிச்சை எடுக்கும் நிலையில் இருந்த அவருக்கு நான் சோறு போட்டேன். இதை பிக்பாஸில் கூட கூறியிருக்கிறார். இவ்வாறு மனைவி தெரிவித்துள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications