கில்லி டு டெல்லி.. விஜய்யை பங்கப்படுத்திய சத்யராஜ்.. திமுக பயங்கர ஹேப்பி!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். தம்பி விஜய் டெல்லி ஒரு குரல் கொடுத்தால் ஓடி ஒளிந்துகொள்வார் என்று சத்யராஜ் விமர்சித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் சத்யராஜ், "கரூர் கூட்ட நெரிசல் எவ்வளவு துயரமான சம்பவம் என்பதை அனைவரும் அறிவார்கள். அதற்கு முழுக்க முழுக்க திமுகதான் காரணம், திமுக தீய சக்தி, ஸ்டாலின் சார், ஸ்டாலின் அங்கிள் காரணம் என்று விஜய் பேசினார். ஆனால் அப்படி பேசியதற்காக விஜய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விஜய் மீது சத்யராஜ் விமர்சனம்
காரணம் அந்த வழக்கை சிபிஐ விசாரித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்கை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எந்த ஒரு கட்சி தலைவரும் தன் சொந்தக் கட்சியினருக்கு இப்படி ஒரு துயரம் ஏற்படுவதை விரும்ப மாட்டார் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எவ்வளவு கண்ணியமாக பேசினார். அவர் தவெகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் எல்லாம் எங்கள் கொள்கை தலைவர்கள் என்று தம்பி விஜய் சொன்னார். அந்த கொள்கைகளை உங்கள் ரசிகர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டாமா. புரட்சி தலைவர் அரசியலில் இருந்தபோது அண்ணாவும், பெரியாரும் அவரின் கொள்கை தலைவர் என்றார். பாடல்கள் மூலமே அவர்களின் கொள்கைகளை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.
சினிமாவில் தான் அன்பு
திரையரங்குகளை திண்ணை பள்ளிக் கூடமாக மாற்றினார் எம்ஜிஆர். யார் சினிமாவில் இருந்து வந்தாலும் எம்ஜிஆர் என்றால் எப்படிங்க. ஒரு சினிமா நடிகரை மக்களுக்கு ஏன் பிடிக்கிறது. சினிமாவில் நம் நடிப்பை பார்த்து மக்களுக்கு அன்பு வருகிறது. நீங்கள் நன்கு நடிக்கிறீர்கள். நன்றாக சண்டை காட்சி செய்கிறீர்கள், நடனமாடுகிறீர்கள் என்று தான் உங்கள் மீது அன்பு வருகிறது.
எனக்கும் தம்பி விஜய்யின் படங்களை பார்க்கும்போது ஜாலியாக இருக்கும். கில்லி படம் ரி ரீலிஸ் ஆனபோது கூட என் பேரக்குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்த்தேன். படத்தை பயங்கரமாக ரசித்தேன். சினிமாவிலேயே இருந்தால் தான் அவரை ரசிப்போம். ஏதோ ஆர்வ கோளாறு காரணமாக விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.
ஓடி ஒளிந்துவிடுவார்
அவரால் ஸ்டாலின்போல கெத்தா, தில்லாக நிற்க முடியுமா. டெல்லியில் அவர்களை எதிர்த்து சண்டை போட முடியுமா. டெல்லிக்கு இவரைப் பற்றி தெரியும். டோய் என்றால் ஓடி ஒளிந்துவிடுவார். டெல்லியை எதிர்த்து சண்டையிட நமக்கு ஒருவர் தேவை. அதற்காக தான் திமுகவை ஆதரிக்க வேண்டியது அவசியம்" என்றார்.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications