Dravidian stick பிடித்து நடந்த Dravidian stock.. பெருமைமிகு முதல்வர் ஸ்டாலின்.. சத்யராஜ் நன்றி வீடியோ
சென்னை: பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து சத்யராஜ் தனது வீடியோவில் கூறுகையில் பிறப்பால் யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை என்ற அறப்பால் தந்த ஐயாவின் கருத்தால் கவரப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வனுக்கு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாள் என அறிவித்த எங்கள் பெருமைமிகு முதல்வருக்கு நன்றிகள்.
Dravidian stick பிடித்து நடந்த Dravidian Stock ஸ்டாலின் அவர்கள் வாகனத்தின் 4 கால்களை பேரரங்கம் அதிர முழங்கினார். முழக்கங்கள் தொடர்கின்றன. முயற்சிகள் வெல்கின்றன என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர்
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழக முதல்வராக பதவியேற்றதிலிருந்து ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதே நேரம் அவை மக்கள் பாராட்டும்படியான அறிவிப்புகளாகவும் உள்ளன. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்தது.

ஓணம்
கேரளாவில் ஓணம், பக்ரீத் பண்டிகைகளின் போது தளர்வுகள் அறிவித்தமையால் அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்பதை கருத்தில் கொண்டே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை செய்தோம் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கமளித்துள்ளார். ஆனால் திராவிடக் கொள்கை கொண்ட காரணத்தினால் தமிழக அரசு இது போன்ற மத ரீதியிலான விழாக்களுக்கு தடை விதிப்பதாக பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்தன.

பெரியாருக்கு 100 கோடியில் சிலை
மேலும் தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரியாருக்கு ரூ 100 கோடியில் சிலை அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதற்கு சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எதற்கு ரூ 100 கோடியில் சிலை
அவர் தனது அறிக்கையில் கூறுகையில் பெரியாருக்கு எதற்கு 100 கோடியில் சிலை வைக்க வேண்டும்? சிக்கனமான வாழ்க்கையை கடைப்பிடித்தவர் பெரியார். வறுமையை போக்க பாடுபட்ட பெரியாருக்கு ரூ 100 கோடியில் எதற்காக சிலை வைக்கிறார்கள். குஜராத்தில் வல்லபாய் படேலுக்கு பிரதமர் மோடி பல்லாயிரம் கோடி செலவிட்டு சிலை வைத்துள்ளார். அவருக்கும் ஸ்டாலினுக்கும் என்ன மாறுதல் என்ன வித்தியாசம் இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமானுக்கு ஸ்டாலின் மறைமுக பதிலடி
இந்த நிலையில் சட்டசபையில் நேற்று முன் தினம், அதாவது பெரியாருக்கு எதற்கு சிலை என சீமான் கேள்வி எழுப்பிய பிறகு சட்டசபையில் பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என 110 விதி எண்ணின் கீழ் முதல்வர் அறிவித்தார். சமூக நீதியின் அடித்தளமாக விளங்கியவர் பெரியார். எதற்கும் அச்சமடையாமல் சமூக நீதிக்காக கடைசி வரை போராடியவர். செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள் என முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து ஸ்டாலினை ஏராளமானோர் பாராட்டி வருகிறார்கள்.

சீமானுக்கு ஸ்டாலின் விளக்கம்
மேலும் தனது விளக்கத்தில் சீமானுக்கு பதிலடி அளிப்பது போல் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் பேசிக் கொண்டே இருக்கலாம். அவரை பற்றி பேச வேண்டும் என்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டுதான் பேச வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். எனவே இனி பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்.












Click it and Unblock the Notifications