நெற்றி பொட்டில் அடித்த சிம்பு.. மாநாடு படத்தில் இஸ்லாமியராக நடித்தது ஏன்?.. செம விளக்கம்
சென்னை: மாநாடு திரைப்படத்தில் தான் ஒரு இஸ்லாமிய கதாபாத்திரமாக ஏன் நடித்தேன் என்பது குறித்து நடிகர் சிம்பு விளக்கமளித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியானது மாநாடு என்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் டைம் லூப் என்ற கான்செப்ட் பயன்படுத்தப்பட்டது. இது பொதுவாக ஆங்கில திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஒரு டெக்னிக் ஆகும்.
டைம் லூப் என்றால் வந்த காட்சியே மீண்டும் மீண்டும் காட்டப்படும். ஆனாலும் சலிப்பு தட்டாமல் இருக்க வேண்டும். இதுதான் இந்த கான்செப்ட்டின் சவாலாகும். இந்த படத்தில் எந்த சலிப்பும் தட்டாதபடி வெங்கட் பிரபு எடுத்துள்ளார். இதில் வந்தான்.. சுட்டான்.. ரிப்பீட்டு எனும் டயலாக்கை பேசி திரையரங்கையே எஸ்.ஜே சூர்யா சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

மாநாடு
ஒரு மாநாட்டில் முதல்வராக உள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரவாதியால் சுட்டுக் கொலை செய்யப்படுவது போல் சிம்புவுக்கு ஒரு கனவு வருகிறது. இந்த சம்பவத்திலிருந்து எஸ்ஏ சந்திரசேகரை மீட்கிறாரா என்பதுதான் கதை. முதல்வர் எஸ்ஏசியின் நம்பிக்கைக்குரியவர் என பெயர் எடுத்த ஒய் ஜி மகேந்திரன்தான் அவரை சுட்டுவிட்டு அந்த இடத்திற்கு தான் வரவேண்டும் என எண்ணுவார்.

இஸ்லாமிய இளைஞர்
இதற்காக இவர்கள் இஸ்லாமிய இளைஞரை நியமிக்கிறார்கள். முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற ஒரு தவறான பிம்பத்தையும் அப்துல் காலிஃப்பாக நடித்துள்ள சிம்பு துடைப்பார். நாட்டில் எங்கே எந்த பிரச்சினை நடந்தாலும் அதற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று சித்தரிக்கும் அரசியல் குறித்து இந்த படம் பேசியுள்ளது.

கோவையில் எடுக்கப்பட்ட படம்
கோவையில் எடுக்கப்பட்ட இந்த படம், இஸ்லாமியர்களின் வலிகளையும் வேதனையையும் தனது வசனம் மூலம் அழகாக காட்டியிருப்பார் சிம்பு. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் தான் ஏன் முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பது குறித்து நடிகர் சிம்பு விளக்கியுள்ளார்.

சிம்பு அளித்த பேட்டி
இதுகுறித்து சிம்பு கலாட்டா மீடியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் பிறப்பால் முஸ்லீமாக இருந்திருந்து முஸ்லீம்கள் மீதான தவறான கண்ணோட்டத்தை துடைக்க நினைக்கும் போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், அவர் முஸ்லிம் அதனால் அவர் சார்ந்த சமூகத்திற்காக பேசுகிறார் என நினைப்பார்கள்.

முஸ்லீம் கதாபாத்திரம்
ஆனால் நான் ஒரு இந்து இளைஞர், முஸ்லீம் கதாபாத்திரத்தில் அவர்கள் மேல் உள்ள களங்கத்தை போக்க வேண்டும் என்பதால் நான் அந்த ரோலில் நடித்தேன். இங்கிருந்துதான் மக்கள் மாற வேண்டும். மற்ற சமூகத்து மக்களை எப்படி பார்க்கிறோம் என்பதை பொருத்துதான் வேற்றுமையில் ஒற்றுமை ஏற்படும். ஒரு சமூகத்தினரை எப்படி பார்த்து கொண்டிருந்தோம் என்பது இன்றைய தினம் என் படத்தின் மூலம் அதிகபடியான மக்களுக்கு போய் சேர்ந்துள்ளது.

தவறான பிம்பம்
தீவிரவாதிகள் என்றாலே ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருப்பார்கள் என கூறுவதும் மற்ற சமூகத்தில் தீவிரவாதிகள் இருக்க மாட்டார்கள் என கூறுவதும் தவறு. இதைத்தான் நான் என் படத்தில் சொல்லியுள்ளேன் என சிம்பு தெரிவித்தார். நடிகர் சிம்பு சமூகம் சார்ந்த கருத்துகளை பேசுவார். ஒரு முறை கர்நாடகாவில் காவிரி தர மறுப்பதை எதிர்த்து போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications