ஷூ கூட இல்ல.. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் அண்ணா செய்த உதவி.. இந்திய வீராங்கனை சஜனா நெகிழ்ச்சி!
சென்னை: 2018 வயநாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது இந்திய கிரிக்கெட் வீராங்கனை சஜீவன் சஜனாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பலரும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் முடிவடைந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக உருவாகினார் சஜீவன் சஜனா. கேரளாவைச் சேர்ந்த சஜனாவுக்கு தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு சஜனாவின் சினிமா வாழ்க்கையே காரணம். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பராக சஜனா நடித்திருப்பார்.

இதனால் டபியுள்யூபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சஜனா வாங்கப்பட்ட போதே, தமிழக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறினர். அதேபோல் மும்பை அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே வாழ்வா சாவா என்ற நிலையில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்திருப்பார். இதுவே அவருக்கு இந்திய அணியிலும் இடத்தை பிடிக்க காரணமாக மாறியது.
இந்த நிலையில் கிரிக்கெட் வீராங்கனை சஜனா 2018ஆம் ஆண்டு வயநாடு பெருவெள்ளத்தின் போது நிகழ்ந்த மோசமான சம்பவங்களையும், அதன்பின் நடிகர் சிவகார்த்திகேயன் உதவி குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில், 2018 வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் என் வீடு மொத்தமாக அடித்து செல்லப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்களும் இல்லை.
கிரிக்கெட்டில் வென்ற கோப்பைகள், எனது கிரிக்கெட் உபகரணங்கள், விருதுகள் என்று அனைத்து காணாமல் போயின. அந்த நேரத்தில்தான் என்னை சுற்றியுள்ளவர்கள் உதவி செய்தார்கள். தமிழ் சினிமா நடிகர் சிவகார்த்திகேயன் என்னை அழைத்து, ஏதாவது உதவி தேவையா என்று கேட்டார். அப்போது அவரிடம், அண்ணா.. என் கிரிக்கெட் உபகரணங்கள் மொத்தமாக சென்றுவிட்டது..
புதிய ஸ்பைக் ஷூ அத்தியாவசிய தேவையாக உள்ளது என்று கூறினேன். அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு தேவையான ஸ்பைக் ஷூ, உபகரணங்கள் வந்து சேர்ந்தது. அந்த நேரத்தில் சேலஞ்சர் டிராபி விளையாட செல்ல வேண்டிய சூழலில் இருந்தேன். அதேபோல் என் குடும்பத்தினர் பாதுகாப்பு பற்றிய கேள்வி எழும் போதெல்லாம், எனக்கு பதற்றம் ஏற்படும்.
கொரோனா பரவல் வந்த போது கேரளா கிரிக்கெட் சங்கம் ஆதரவாக இருந்தது. இதன்பின் மும்பை அணி என்னை மகளிர் ஐபிஎல் தொடரில் ரூ.15 லட்சத்திற்கு வாங்கினார்கள். இப்போது எனது வருமானம் மூலமாக குடும்பத்தினர் நன்றாக இருக்கிறார்கள். வீட்டுக் கடனை விரைவாக அடைத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications