கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த நடிகர் சுபா வெங்கட் - திரைப்படத்துறையினர் அதிர்ச்சி
கோலிவுட்டில் பல பிரபலங்கள் கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். இன்று நடிகர் சுபா வெங்கட் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்.
சென்னை: நடிகரும், சினிமா விமர்சகருமான சுபா வெங்கட் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். கோலிவுட்டில் பல பிரபலங்கள் கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். சுபா வெங்கட்டின் மரணத்திற்கு திரை உலக பிரபலங்களும் அவரது நண்பர்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வெங்கட் சுபா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுபா வெங்கட் சின்னத்திரையில் ஒளிபரப்பான பல்வேறு டிவி சீரியல்களில் நடித்துள்ளார். யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்த அவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவில் இரண்டாம் அலைக்கு நாள் ஒன்றிற்கு 3500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிக்சை பெற்று பலர் குணமடைந்தாலும் அடுத்தடுத்து பலர் மரணமடைந்து வருகின்றனர். இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், நடிகர் பாண்டு உள்ளிட்டவர்கள் வரிசையில் தற்போது சுபா வெங்கட் உயிரிழந்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications