தவெக மாநாட்டில் ரேம்பில் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டை லாவகமாக கேட்ச் பிடித்து கழுத்தில் போட்ட விஜய்
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ரேம்பில் நடந்து வந்த நடிகர் விஜய் மீது தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டை கேட்ச் பிடித்து அதை தன் கழுத்தில் அணிந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் வந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தினார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடைக்கு சரியாக 4 மணிக்கு விஜய் வந்தார். அவர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும் சந்தன நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தார். சிறிது நேரம் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அவர் கட்சி நிர்வாகிகள் வழங்கிய பூங்கொத்தை பெற்றுக் கொண்டார். பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் நோக்கி ஓடி வந்தார்.

தொண்டர்களை நோக்கி கையசைத்த அவருக்கு கட்சி கொடி பதித்த துண்டுகள் ரேம்ப் நோக்கி வீசப்பட்டன. கீழே விழுந்த துண்டை எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டார். பிறகு நிறைய துண்டுகள் விழுந்த போது அதில் சிலவற்றை கேட்ச் பிடித்தபடியே அணிந்து கொண்டார்.
பின்னர் அவர் திரும்பவும் மேடை நோக்கி வந்த போது அணிந்திருந்த துண்டுகளை தொண்டர்கள் நோக்கி வீசினார். மேலும் தான் அணிந்திருந்த துண்டுகளில் ஒன்றை மட்டும் அணிந்துக் கொண்டார். மற்றவற்றை அங்கிருந்த டீப்பாயில் வைத்துக் கொண்டார். பிறகு மதசார்ப்பற்ற கொள்கை என காணொலி ஒளிபரப்பப்பட்டது.
இதையடுத்து சுதந்திர போராட்ட வீரர்கள், மொழி போர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு பூக்களை தூவி விஜய் மரியாதை செலுத்தினார். மேலும் மாநாட்டில் தொண்டர்களின் உற்சாகத்தை பார்த்த விஜய் கண் கலங்கினார். தொண்டர்கள் உற்சாகம் அடங்கவே நீண்ட நேரம் பிடித்தது.
இந்த மாநாட்டில் இருக்கும் கூட்டத்தை பார்த்த விஜய் உற்சாகமடைந்தார். முன்னதாக இந்த மாநாடு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தற்போது 100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி வைத்தார். இந்த கொடி அந்த மாநாட்டு இடத்திலேயே இருக்கும் என சொல்லப்படுகிறது.
அப்போது கட்சியின் கொடி பாடல் இசைக்கப்பட்டது. ரிமோட் உதவியுடன் கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய். தலைவர் கொடி பறக்குது என்ற பாடல்தான் ஒலிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்கள் பலர் நடனமாடி வருகிறார்கள். இன்னும் சிலர் தளபதி தளபதி என அழைத்து வருகிறார்கள்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications