‛‛நடிகர் விஜய்யின் முதல் வாழ்த்து’’.. திமுக, பாஜகவுக்கு இல்லை.. வேறு யாருக்கு தெரியுமா? செம ட்விஸ்ட்
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற 2 கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் பாஜகவை சேர்ந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இல்லை.
நாடு முழுவதும் இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதேபோல் ஒடிசா மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலை பொறுத்தமட்டில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது.

பாஜக கூட்டணி 290 இடங்களிலும், ‛இந்தியா’ கூட்டணி கட்சிகள் 235 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். மற்றவர்கள் 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
அதேபோல் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் நடக்கிறது. ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் - பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது.
அதாவது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் அதிகபட்சமாக 136 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கு தேசம் கூட்டணியில் உள்ள நடிகர் பவன் கல்யாண் கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. ஜெகன் கட்சி 10 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 88 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 136 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதோடு ஆளும் கட்சியாக இருந்த ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் நடிகர் விஜய்யிடம் இருந்து முதல் வாழ்த்து வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் விஜய் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வாழ்த்து சொன்னதாக அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛பவன் கல்யாணுக்கு வாழ்த்துகள். உங்கள் கட்சியின் வெற்றிக்கும், ஆந்திரா சட்டசபை தேர்தலில் 2 வது பெரிய கட்சியாக மாறியதற்கும் வாழ்த்துகள். ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்கான உங்களின் பொறுமை மற்றும் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள். மனமார்ந்த வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.
இன்னொரு பதிவில், ‛‛தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள். ஆந்திராவை வழிநடத்துவதற்கான சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் பெற்ற வெற்றிக்கும், உங்களின் தொலைநோக்கு பார்வை கொண்ட ஆட்சியின் கீழ் ஆந்திரா மக்கள் பெரும் முன்னேற்றம் அடையவும் வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது வரை நடிகர் விஜய் தமிழகத்தில் 40 தொகுதிகளில் வென்ற திமுக கூட்டணி அல்லது மத்தியில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட தனிப்பெரும் கட்சியாக நிலைத்து நிற்கும் பாஜக தலைவர் அல்லது பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications