முஸ்லீம்களை தீவிரவாதிகளா காட்டிட்டு.. இப்போ மத நல்லிணக்கமா? தவெக தலைவர் விஜய்க்கு முளைத்த சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. பாஜக, திமுக, நாம் தமிழர் வரிசையில் தற்போது சில இஸ்லாமிய அமைப்புகளும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் விஜய் மன்னிப்பு கேட்டால் தான் அவரது அரசியல் பயணத்துக்கு ஆதரவு என கூறி இருக்கிறார் தடா ரஹீம்.

வெறும் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு. பல ஆண்டுகளாகவே தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி வந்த நடிகர் விஜய் அதனை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார்

tvk manadu actor vijay tada rahim

தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் பிரச்சனைகள் நெருக்கடிகள் இருந்தபோதும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது

தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர் இது ஒருபுறம் இருக்க மாநாட்டில் விஜயின் அனல் தெறிக்க இருந்த பேச்சு பரபரப்புகளை பற்ற வைத்துள்ளது. பிளவுவாத அரசியலுக்கு எதிரான நிலைப்பாடு, ஊழல் ஆட்சியை அகற்றுவது, திராவிடம் தமிழ் தேசியம் இரண்டும் இரு கண்கள் போன்றது, என விஜய் பேசியது மூன்று தரப்பை மிக ஆத்திரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

பிளவுவாத அரசியல் என தங்களை தான் விஜய் குறிப்பிடுகிறார் என பாஜகவும், ஊழல் குடும்பம் என விமர்சித்ததால் கடுகடுப்பில் திமுகவும், தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றுதான் என பேசியதற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியினர் பேட்டியிலும் சமூக வலைதளங்களிலும் விஜயை விமர்சித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மாநாட்டில் சமூக நீதி மத நல்லிணக்கம் ஆகியவற்றை தமிழக வெற்றிக்கழகம் முன்னெடுக்கும் என விஜய் கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய்க்கு அடுத்த நெருக்கடியாக இஸ்லாமிய அமைப்புகள் சில கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளன. அந்த வகையில் துப்பாக்கி பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்த விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என திடீரென களத்திற்கு வந்திருக்கிறார் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவரான தடா ரஹீம்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிப்பது அவரவர் விருப்பம். துப்பாக்கி, பீஸ்ட் திரைப்படங்கள் மூலம் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக சமூக விரோதிகளாக சித்தரித்து பல கோடி ரூபாய் சம்பாதித்த விஜய் அவர்கள் எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டை அரசியலுக்காக பயன்படுத்தப் பார்க்கிறார்.

முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் இதுவரை அதுகுறித்து வருத்தமோ மன்னிப்போ கேட்காமல் ஆணவத்தோடு விஜய் இருக்கிறார். விஜய் முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காதவரை அரசியலில் முஸ்லிம் சமூகம் விஜய்யை புறக்கணிக்கும். இதை மீறி ஏதாவது முஸ்லிம் அமைப்போ தனி நபர்களோ விஜய் கட்சியை ஆதரித்து அரசியல் களம் கண்டால் அவர்களை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக அம்பலப்படுத்துவோம்.

விஜய்க்கும் , எங்களுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. முஸ்லிம் சமுதாயத்தை பொதுவெளியில் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக சித்தரித்து திரைப்படம் எடுத்ததினால் இந்த எதிர்ப்பு. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் உடனடியாக முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்." என கூறியுள்ளார்.

ஏற்கனவே பல தரப்பில் இருந்தும் விஜய்க்கு நெருக்கடிகள் வரும் நிலையில் இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு எதிராக போர் கொடி தூக்கி இருப்பது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் எல்லோரும் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் அவர்தான் உண்மையான வீரன் என சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களும், நடிகர் விஜய்யின் ஆதரவாளர்களும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+