Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Z இல்லைனா ஓகே.. X, Y கூட பரவால்ல.. திடீரென ட்ரெண்டாகும் உன்னைப் போல் ஒருவன்! அன்றே கணித்த ஆண்டவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் 2009ல் வெளிவந்த உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த காட்சி திடீரென எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.

Actor Vijay Kamal Haasan tvk

இதை அடுத்து களத்திற்கு வரவில்லை என்ற விமர்சனம் தவிடுபொடியானதால் உற்சாகத்தில் இருக்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜய் செல்ல இருக்கிறார். அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட முட்டை வீச்சு சர்ச்சை சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்களை பெற்றது.

குறிப்பிட்ட 'ஒரு நடிகரின்' ரசிகர்கள் இது தொடர்பாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. தற்போது தமிழக வெற்றிக் கழக பொதுக் குழுக் கூட்டம் மகாபலிபுரத்தில் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான நடவடிக்கைகளை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. 8 முதல் 11 சிஆர்பிஎஃப் காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர்.

ஒரே நேரத்தில் இல்லாமல் சுழற்சி முறையில் விஜய்க்கு இவர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு விஜய் தரப்பில் பாதுகாப்பு கேட்டு மத்திய அரசிடம் கடிதம் அளிக்கப்பட்டதாகவும், அது பரிசீலனையில் இருந்த நிலையில் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தான் எக்ஸ் வலைதளத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஒரு மிகப்பெரிய நடிகருக்கு பாதுகாப்பு தேவை என ஒரு சிலரும், மக்களை சந்திக்க வருபவருக்கு பாதுகாப்பு என்பது மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடும் பாதுகாப்பு தேவையற்றது என சிலரும், தங்கள் பக்கம் இழுக்கவே பாஜக தலைமையிலான மத்திய அரசு விஜய்க்கு பாதுகாப்பு வழங்கி உள்ளது என மற்றொரு தரப்பும் கூறி வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் உன்னை போல் ஒருவன் படத்தில் இடம்பெற்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் கமல்ஹாசன், மோகன்லால், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் மோகன்லால் போலீஸ் கமிஷனராக நடித்திருப்பார். அவரிடம் நடிகராகவே நடித்திருந்த ஸ்ரீமன் பாதுகாப்பு கேட்டு செல்வார். ரசிகர் மன்றத்திலிருந்து அரசியலில் குதிக்கும் நேரம் பார்த்து எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. பெட்ரோல் குண்டு வீசுவேன் என்கிறார்கள் எனவே எனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பார்.

அது மத்திய அரசுதான் தரவேண்டும் என கமிஷனரான மோகன்லால் கூற, எக்ஸ், ஒய் என எது இருந்தாலும் பரவாயில்லை என்பார் ஸ்ரீமன். தற்போது விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதை வைத்து இந்த காட்சியை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

பொதுவாகவே கமல் ஏதாவது ஒரு நிகழ்வைப் பற்றியோ அல்லது ஒரு விஷயத்தை சொன்னால் அது பின்னர் பலிக்கும் என்பது பல ஆண்டு காலமாக சொல்லப்படுகிறது. மகாநதி படத்தில் பைனான்ஸ் ஃபிராட், அன்பே சிவம் படத்தில் சுனாமி, தசாவதாரம் படத்தில் வைரஸ் என கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது பிறகு பலித்திருக்கிறது. தற்போது உன்னை போல் ஒருவன் படத்தில் வைத்த சீனும் தற்போது மீண்டும் நடந்திருப்பதாக கூறி அன்றே கணித்த ஆண்டவர் என ட்ரெண்டாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+