பெங்களூர் ஏர்போர்ட் தாக்குதல் விவகாரம்.. திடீரென சுப்ரீம் கோர்ட்டிற்கு போன விஜய்சேதுபதி! என்ன காரணம்
சென்னை: பெங்களூர் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் சேதுபதி முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் விஜய் சேதுபதியை ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது. பின்னால் இருந்து ஓடி வந்து அந்த நபர் விஜய் சேதுபதியை தாக்கி இருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. பெங்களூர் விமானநிலையத்தில் வைத்து நடிகர் விஜய் சேதுபதியை தாக்கிய நபர் மகா காந்தி என்பது பின்னர் தான் தெரிய வந்தது.

தாக்குதல் சம்பவம்
மைசூரில் மருத்துவ பரிசோதனை செய்யச் சென்ற மகா காந்தி, விஜய் சேதுபதியைச் சந்தித்துள்ளார். அப்போது விஜய் சேதுபதியிடம் பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் இருப்பினும், அவர் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்தாக மகா காந்தி தெரிவித்தார். மேலும், பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்திப் பேசியதாகவும் தனது சாதி குறித்தும் தவறாகப் பேசியதாக மகா காந்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு
மகா காந்தி மேலும் தனது மனுவில் "பெங்களூர் ஏர்போட்டில் நடந்த சம்பவங்கள் இது தான். இருப்பினும், ஊடகங்களில் விஜய் சேதுபதி தாக்கப்பட்டது போல அவரது தரப்பில் அவதூறு பரப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டி இருந்தார். இதன் காரணமாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

சம்மன்
இந்த வழக்கை சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பியது. இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்குத் தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்தார்.

சென்னை ஐகோர்ட்
இருப்பினும், விஜய் சேதுபதியின் இந்த மனுவை உயர் நீதிமன்றம் குற்ற அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூலை 29இல் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதேபோ சமயம் தாக்குதல் வழக்கு விசாரணை எல்லைக்கு உட்பட்டது இல்லை என்பதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம்
இதையடுத்து விஜய் சேதுபதிக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனச் சம்மன் அனுப்பி இருந்தால், அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராவர் எனக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இப்போது நடிகர் விஜய் சேதுபதி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications