சென்னை கண்ணகி நகரில் நடிகை அம்பிகா.. தூய்மை பணியாளர் வீட்டிற்கே சென்று.. நெகிழ வைத்த பேட்டி
சென்னை: சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்தாருக்கு நேரில் சென்று நடிகை அம்பிகா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, நான் ஷூட்டிங் சென்றுவிடு வரும்போது, அறுந்து விழுந்த மின்சார கேபிளில் இருந்து பலரை காப்பாற்றினேன். அந்நியன் படம் பார்த்த பிறகு எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. நம் அசிங்கத்தை சுத்தப்படுத்தும் மக்களை நாம் பாதுகாப்பது முக்கியமானது என்று கூறினார்.
நடிகை அம்பிகா பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அண்மை காலமாக குரல் கொடுத்து வருகிறார். கடந்த மாதம் திருப்பூர் ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அடுத்ததாக சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் போது, நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அவர்களுக்காக அம்பிகா பேசிய பேச்சு இன்றும் பலராலும் பேசப்படுகிறது,

இந்நிலையில் சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்தாருக்கு நேரில் சென்று நடிகை அம்பிகா ஆறுதல் தெரிவித்தார். பின்பு செய்தியாளரை சந்தித்து பேசிய நடிகை அம்பிகா, நான் ஷூட்டிங் சென்றுவிடு வரும்போது, அறுந்து விழுந்த மின்சார கேபிளில் இருந்து பலரை காப்பாற்றினேன். நான் மின்சாரத் துறைக்கு ஃபோன் செய்து சரிசெய்ய சொன்னபோது என் ஏரியா இல்லை என்று சொன்னார்கள். அதன்பிறகு எனக்கு தெரிந்தவர்களை வைத்து அதனை சரிசெய்ய வைத்தேன்.
உலகில் நம்மால் காப்பாற்றவே முடியாதது மின்சார விபத்து. இதை சரிசெய்ய முடியாமல் வேறு என்ன வேலை. அந்நியன் படம் பார்த்த பிறகு எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. நம் அசிங்கத்தை சுத்தப்படுத்தும் மக்களை நாம் பாதுகாப்பது முக்கியமானது. தினம் தினம் இதுபோன்ற செய்தியை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
இதுபோல பிரச்சனைகள் பற்றி கேள்விப்பட்டதும், அங்கே சரி ஆகட்டும் என சொன்னதும் சரி ஆகிவிடும் என்றால் அதை செய்ய நான் தயார். போஸ்டர் ஒட்டுவதற்கும், டிக்கெட் வாங்கவும் இவர்கள் தேவை. ஆனால், அவர்களுக்கு ஒன்று என்றால் யாரும் வருவதில்லை.
அம்பிகா அரசியலுக்கு வரவேண்டும் என்று இருந்தால் அதை மாற்ற முடியாது. வருவீர்களா என்றால், வந்தால் என்ன? மக்களும் மனிதர்கள் தான். டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் எடுக்கும் மெஷின்களாக நினைக்கக் கூடாது. வரலட்சுமி குடும்பத்தை பார்க்க வந்தது அரசியல் அல்ல; நான் அரசியலுக்கு வந்தால், இவர்களுக்கு நல்லது நடக்கும் என்றால் அரசியலுக்கு வருவதில் எனக்கு பிரச்சனை இல்லை" இவ்வாறு நடிகை அம்பிகா கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications