காதல் செடி மாதிரி..5 வருஷ லிவ்இன் வாழ்க்கை! 3வது கணவருடன் பூவே உனக்காக நடிகை! தப்பா? நெத்தியடி பதில்
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பூவே உனக்காக படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அஞ்சு அரவிந்த். முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில், இரண்டாவது கணவரும் இறந்த பிறகு சஞ்சய் என்பவர் உடன் 5 வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை எனவும், தனது வாழ்க்கையே தனக்கு முக்கியம் என பதிலடி கொடுத்திருக்கிறார்.
மிக இளம் வயதிலேயே சினிமா துறைக்கு வந்தவர் அஞ்சு அரவிந்த். மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் பேரன்பை பெற்றார். அதற்குப் பிறகு தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.
மோகன்லால், மம்முட்டி, ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். எத்தனை படங்கள் வந்தாலும் அவருக்கு தற்போது வரை அடையாளமாக இருப்பது பூவே உனக்காக திரைப்படம் தான்.

நடிகர் விஜய்யின் காதலியாக அவர் நடித்திருப்பார் குறிப்பாக கிளைமாக்ஸ் இல் அவர் பேசும் வசனம் மிகவும் பிரபலம். முதன் முதலில் சுரேஷ் கோபியும் அன்னி ஆகியோர் இணைந்து நடித்த சிபி மலையில் அக்ஷரம் படத்தில் தான் அஞ்சு அரவிந்த் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மம்பட்டியுடன் அழகிய ராவணன், சித்தார்த்தா, மோகன்லாலின் நரன் என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை நடித்தார்.
பூவே உனக்காக திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து ஒன்ஸ் மோர், உன்னருகே நானிருந்தால், வானத்தைப் போல உள்ளிட்ட பல படங்களில் அஞ்சு அரவிந்த் நடித்திருந்தார். சினிமாவில் நடித்த போதே பல சிரியல்களிடம், சில நாடகங்களிலும் நடித்து வந்தார். நடிப்பு மட்டும் இன்றி சிறந்த நடன கலைஞரான அவர் தனது பெயரிலேயே நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கும் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்," தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது. இரண்டாவது திருமணம் செய்து நிலையில் சில ஆண்டுகளில் அவர் இறந்து விட்டார். சஞ்சய் அம்பல பரம்பத் என்பவர் கடந்த ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம். மகிழ்ச்சியாக எங்களது வாழ்வு சென்று கொண்டிருக்கிறது. எனது திறமையை பார்த்து நடன பள்ளி வைத்துக் கொடுத்து அதற்கு என் பெயரை வைத்தவர் அவர் தான்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது இருந்து அவர் மீது எனக்கு கிரஷ். இருவரும் சேர்ந்து 96 திரைப்படத்தை பார்த்தோம். எங்களது பழைய பள்ளிக்கால நினைவுகள் மீண்டும் வந்தது. தற்போது ஐடி துறையில் அவர் பணிபுரிந்தாலும் அவரும் ஒரு நடனக் கலைஞர் தான். தற்போது ஐடி வேலையை விட்டுவிட்டு எழுத்து பணியில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவரிடம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். இதனை சிலர் விமர்சிக்கலாம். என்னை பொறுத்த வரை எனது வாழ்க்கை தான் எனக்கு முக்கியம். விமர்சனங்களை பற்றி கவலை இல்லை" எனக் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications