நடிகையை 8 வருடமாக சீரழித்த நபர்.. "நம்ப வைத்து கழுத்தறுத்துட்டாரு அலெக்ஸ்".. சென்னை போலீஸில் புகார்
சென்னை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, தன்னை ஏமாற்றிவிட்டு பாலியல் ரீதியாக அத்துமீறிய நபர், வெளிநாடு தப்பி விட்டதாக விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் நடிகை ஒருவர் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புகாரை தந்தவர் 30 வயது துணை நடிகை ஆவார்.. இவர் மாடலிங்கும் செய்து வருகிறார்.. தொழிலதிபராகவும் உள்ளார். என்ன நடந்தது?
சென்னையை சேர்ந்த அந்த நடிகை, தன்னை கனடா நாட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் தந்துள்ளார்..

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு நடிகை அளித்த பேட்டியில், " என்னுடன் கல்லுாரியில் படித்த சீனியர் மணப்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் ஜவஹர் (34) என்னிடம் நட்பாக பழகினார். அவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். குடும்பத்தினர் கனடாவில் வசிக்கின்றனர். அலெக்ஸின் பெற்றோர் சென்னையில் உள்ளனர்.
அலெக்ஸ், வேலூர் பெண்
நட்பாக பழகி வந்த அலெக்ஸ் , கடந்த 2017ல் காதலிப்பதாக சொன்னார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனினும், வெளிநாடு செல்லும் ஆசையில், 2018ம் ஆண்டு வேலுார் பெண்ணை திருமணம் செய்த அலெக்ஸ் அவருடன் கனடாவில் வேலைக்கு சேர்ந்தார்.
அதன்பிறகு மீண்டும் என்னிடம் பேசிய அலெக்ஸ், "என் மனைவி என்னை கொடுமைப்படுத்துகிறார். அவருடன் என்னால் இருக்க முடியவில்லை அவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறேன். உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்" எனக்கூறி வற்புறுத்தினார்.
பொய்யான வாக்குறுதி
அலெக்ஸ், நிஜமாகவே திருமண உறவில் பாதித்துள்ளார், அவரும் நம்மை உண்மையாக காதலிக்கிறார். அதனால் அவரையே திருமணம் செய்து கொள்ளலாம் முடிவு எடுத்தேன். கடந்தாண்டு மே மாதம் என்னிடம் பேசிய அலெக்ஸ், 'விரைவில் சென்னை வருகிறேன் அப்போது மனைவியை விவாகரத்து செய்கிறேன். பின் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். கனடாவில் வசிக்க பிடிக்கவில்லை. இந்தியாவிலேயே செட்டில் ஆகிறேன்' என்றார்.
அதன்படி, கடந்தாண்டு இறுதியில் சென்னை வந்த அலெக்ஸ், டிசம்பர் மாதம் 6ம் தேதி, சோழிங்கநல்லுாரில் உள்ள விடுதியில் அறை எடுத்து, இருவரும் ஒன்றாக தங்கினோம். என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதாக உறுதி அளித்த நிலையில் அவரிடம் என்னை பறிகொடுத்தேன். பின் கனடா சென்ற அலெக்ஸ், கண்டு கொள்ளவே இல்லை.
8 ஆண்டுகள் துரோகம்
அவர் சொன்னபடி மனைவியை விவாகரத்தும் செய்யவில்லை. மாறாக சமூகவலைதளத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ள வீடியோ மற்றும் படங்களை பகிர்ந்து வந்ததுடன் என் மொபைல் அழைப்பையும் நிராகரித்தார். நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். அலெக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸின் பெற்றோரிடம், விசாரித்தனர்.
விசாரணைக்கு அலெக்ஸ் ஒத்துழைக்காத நிலையில், அவரை இந்தியா வரவழைத்து விசாரிக்க போலீசார் முடிவு எடுத்துள்ளனர். செக்ஸிற்காக, 8 ஆண்டுகளாக என்னை நம்ப வைத்ததுடன், அவரது மனைவியையும் என்னிடம் தவறாக சித்தரித்து ஏமாற்றியது என்னால் தாங்க முடியவில்லை. என்னைப் போல் பாதிக்கும் பெண்கள் பலர், விஷயத்தை வெளியே சொல்வதில்லை. இதனால் தவறு செய்யும் ஆண்கள் தொடர்ந்து பெண்களை ஏமாற்றி வருகின்றனர். அத்தகைய நபர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
டான்ஸ் ரீல்ஸ் வெளியீடு
இந்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். அதன்படி,கனடா நாட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் அலெக்ஸிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. தற்போது அலெக்ஸ் கனடாவில் இருப்பதால் சட்டரீதியிலான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்..
மேலும் விசாரணைக்கு ஆஜராக அலெக்ஸை இந்தியாவிற்கு வரும்படி போலீசார் அழைத்தார்களாம்.. அதற்கு தனக்கு முதுகு வலி இருப்பதால் வர முடியாது என்று சொல்லிவிட்டாராம் அலெக்ஸ்.. ஆனால், தன்னுடைய குடும்பத்துடன் அலெக்ஸ் டான்ஸ் ஆடி, ரீல்ஸ் வெளியிட்டிருக்கிறார்.. இதை கண்டு சென்னை போலீசார் அதிர்ந்து போயிருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications