"இது டார்கெட் விக்கெட்".. எஸ்.ஜி.சூர்யா கைது குறித்து காயத்ரி ரகுராம் போட்ட பரபரப்பு ட்வீட்
சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்ட ட்வீட் பதிவில், எஸ்.ஜி.சூர்யாவுக்கு போலி செய்தி மற்றும் தவறான தகவல்களை கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பியதுடன், இது டார்கெட் விக்கெட் என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் அவர், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், 'கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மைப் பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்' என எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். மேலும், "எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா?
பிரிவினை வாதம் பேசி சிவப்பு கொடியைப் போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே" என சு.வெங்கடேசனை விமர்சித்திருந்தார் எஸ்.ஜி.சூர்யா. இந்த விவகாரம் குறித்து சிபிஐஎம் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த எஸ்.ஜி சூர்யாவை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். எஸ்.ஜி.சூர்யா மீது 153 (A), 505 (1) (B), 504, 505(1)(C), 66(D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில், எஸ்.ஜி சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் , எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில துணை தலைவர் திருப்பதி நாராயணன் உள்பட பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் எஸ்.ஜி.சூர்யா கைது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "எஸ்.ஜி.சூரியா பி.எல்.சந்தோஷ் ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவர் அடுத்த மாநிலத் தலைவராக வருவார் என்றும் அண்ணாமலை பயந்திருக்கலாம்.
மேலும் அவருக்கு போலி செய்தி மற்றும் தவறான தகவல்களை கொடுத்தது யார்? வேறு யார்? நம்ம வார்ரூம் மட்டுமே ஒரு நபரை தவறான தகவல்களில் சிக்க வைக்க முடியும். இது டார்கெட் விக்கெட் என்று அழைக்கப்படுகிறது. அண்ணாமலையின் வெளியே சத்தம், உள்ளே மகிழ்ச்சி.
தவறான செய்தி தவறு தானே? சரியான செய்தி தவறான மாவட்டம், இந்த தவறான செய்திக்கு மதுரை கவுன்சிலரை எப்படி குற்றம் சொல்ல முடியும்? அவரது வேலை ஆபத்தில் இருக்கலாம். அது தவறு. உங்கள் தவறுகளை உணருங்கள். சிறிய தவறுகள் மற்றவர்களை பெரிய பிரச்சனைக்கு இழுத்துவிடும்." என்று காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications