அண்ணாமலையை சந்தித்தது ஏன்? “விரைவில் நீங்க எதிர்பார்க்கும் செய்தி”! பின்னணியை உடைத்த நடிகை கஸ்தூரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை இன்று சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார் நடிகை கஸ்தூரி. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களைச் சந்தித்து இந்த திடீர் மீட்டிங்கின் பின்னணியை உடைத்தார்.

அண்மையில் ஒரு கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய பேச்சு அவரை சிறைக்கு அனுப்பியது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் பற்றி அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த கஸ்தூரி, தீவிரமாக திமுகவுக்கு எதிராக கருத்துகளைப் பேசி வருகிறார். இந்தச் சூழலில் தான் இன்று திடீரென சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் சென்றார் கஸ்தூரி.

kasthuri bjp annamalai

பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அண்ணாமலை தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்த நேரத்தில் கமலாலயம் சென்ற கஸ்தூரி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்துள்ளார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களைச் சந்தித்து, அண்ணாமலையுடன் நடந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அண்ணாமலைக்கு நன்றி சொல்ல வந்ததாகவும், அரசியல் குறித்து விவாதித்ததாகவும் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய கஸ்தூரி, "இன்று முதல் முறையாக நான் கமலாலயம் வாசலில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். தெலுங்கு மக்கள் குறித்த பேச்சுக்காக நான் சர்ச்சையில் சிக்கிய போது லண்டனில் இருந்த போதும் அண்ணாமலை எனக்கு பக்கபலமாக இருந்தார். லண்டனில் இருந்த அண்ணாமலையிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எனக்கு அறிவுரை கூறி, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது அண்ணாமலை சொன்னதில் அப்போது நான் பாதியைத்தான் செய்தேன். அதற்கு என்னை கைது செய்து ஜெயிலில் அடைத்துவிட்டார்கள். எனது சோதனையான காலகட்டத்தில் அண்ணாமலை எனக்கு பக்கபலமாக இருந்ததற்காக இன்று அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

அண்ணாமலை உடன் மேலும் பல விவகாரங்கள் குறித்தும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் விவாதித்தோம். இன்னும் விவாதிக்க வேண்டியது உள்ளது. முழுமையாக விவாதித்து முடித்த பிறகு நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு விரைவில் தகவல்களைத் தருகிறேன். இப்போது அப்படி எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய கஸ்தூரி, "திமுக ஆட்சியை அகற்றி ஒரு புதிய காற்று தமிழ்நாட்டில் வீசவேண்டும் என்றால் எல்லோரும் இணைந்து ஒருமித்த கூட்டணியாக இருந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் நினைப்பதையே எல்லோரும் நினைக்க வேண்டும் என்று சொல்ல முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இளையராஜா சர்ச்சை விவகாரம் பற்றி பேசிய கஸ்தூரி, "இளையராஜா ஒரு இசைக்கடவுள். அவர் கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இளையராஜாவை கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறுகின்றனர். கோவில் கருவறைக்குள் நான் உள்பட யாராலும் உள்ளே செல்ல முடியாது. அவர் எந்த சாதியாக இருந்தாலும் கோவில் கருவறைக்குள் செல்ல முடியாது.

அர்ச்சகர்கள் மட்டுமே கோவில் கருவறைக்குள் செல்ல முடியும். இளையராஜாவை அங்கு யாரும் வெளியேற்றவில்லை. அவர் போக முயற்சி செய்யவே இல்லை. அங்கு நில்லுங்கள் என கூறி மரியாதை செலுத்தினர். இதை திரித்துப் பேசும் வன்மம் கொண்டவர்களை கண்டித்துத்தான் முன்பும் நான் பேசினேன். இப்போதும் பேசுகிறேன்" எனக் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+