கஸ்தூரி வந்தாச்சு.. "அண்ணாமலை ஜி, இவரை இன்னுமா இந்த உலகம் நம்புது" திமுகவுக்கு செம கடுப்பு.. எதுக்கு
சென்னை: திருச்சி சூர்யா & சாட்டை துரைமுருகன் விவகாரத்தில், என்ட்ரி தந்துள்ளார் நடிகை கஸ்தூரி.. அத்துடன் தமிழக பாஜகவையும் அலர்ட் செய்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
திமுகவுக்கும் அண்ணாமலைக்கும் டீலிங் முடிந்துவிட்டது என்று நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

சாட்டை துரைமுருகன்: உடனே இதுகுறித்து சாட்டை துரைமுருகனிடம் பேசிய, திருச்சி சூர்யா சிவா, சாட்டை துரைமுருகனிடம் "பார்த்து செய்யுமாறு" கேட்டிருந்தார். உடனே சாட்டை துரைமுருகனும் "சரி" என்று பதிலளித்திருந்தார். இப்படி இருவருமே போனில் பேசியிருந்த இந்த ஆடியோவை திருச்சி சூர்யா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த சாட்டை துரைமுருகன், "ஆடியோவில் என்னடா சொல்றது இங்கேயே சொல்றேன்.. எங்கள் இனத்தை கொன்றொழிக்க காரணமாக இருந்த காங்கிரசும் துணை நின்ற திமுகவும் எங்கள் முதல் எதிரிகள்.. அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்டவே நாம் தமிழர் கட்சி துவங்கப்பட்டது..
அண்ணாமலை: பாஜக மனித குலத்திற்கு ஆபத்து.. அண்ணாமலை போன்றவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கே பேராபத்து என்பதை சொல்லி வீடியோ போட்டதற்கு காலில் விழாத குறையாக கெஞ்சி கோரிக்கை வைப்பதுபோல் போன் உரையாடலை பதிவு செய்து போடுவதெல்லாம் சில்லரைத்தனத்தின் உச்சம்.. இதுக்காகவே கோவையில் தங்கியிருந்து அண்ணாமலை போன்ற சில்லரைகளை காலி செய்வோம்!" என்று கூறியிருந்தார்.
இப்படி சாட்டை துரைமுருகனும், திருச்சி சூர்யாவும் மாறி மாறி ட்விட்டரில் சண்டை போட்டுக் கொண்டிருக்க, இவர்களுக்கு நடுவில் என்ட்ரி தந்துள்ளார் கஸ்தூரி. திருச்சி சூர்யா தன்னை பற்றி தவறான தகவலை பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கஸ்தூரி: இதுகுறித்து கஸ்தூரி பதிவிட்டுள்ள ட்வீட்டில், "ஆபாச போன் புகழ்" திருச்சி சூர்யா, சாட்டை துரைமுருகனிடம் சம்பந்தமேயில்லாமல் என்னை பற்றி பொய்யான தகவலை உளறி கொட்டியிருக்கிறார்..
இவர் செய்வதையெல்லாம் பார்த்தால், திமுக சார்பாகவே உள்ளன. அண்ணாமலை ஜி அவர்களுக்கும், பாஜகவுக்கும் திட்டம் போட்டு திருச்சி சூர்யா தொடர்ந்து களங்கம் விளைவிக்கிறார்.. இவரை இன்னுமா இந்த உலகம் நம்புகிறது?
Double agent @TrichySuriyaBJP publicly rebelled against his own party gen sec @ProfessorBJP , insulting him as an 'outsider' to Trichy .... But not a word against DMK alliance candidate Durai Vaiko who is no native either.
— Kasturi (@KasthuriShankar) March 25, 2024
@Annamalai ji @BJP4TamilNadu wake up !
டபுள் ஏஜென்ட் திருச்சி சூர்யா, தன்னுடைய சொந்த கட்சிக்கு எதிராக வெளிப்படையாகவே கலகம் செய்தார்.. பேராசிரியர் ராம சீனிவாசனை திருச்சிக்கு "வெளியாள்" என்று விமர்சித்துவிட்டு, திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இதுவரை திருச்சி சூர்யா பேசவில்லை. அதனால், அண்ணாமலையும், தமிழக பாஜகவும் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும்" என்று நடிகை கஸ்தூரி அலர்ட் செய்திருக்கிறார்.
திமுக டென்ஷன்: பாஜக ஆதரவாளர் என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும்நிலையில், "திமுக எதிர்ப்பாளர்" என்று அழுத்தமான முத்திரை குத்தப்பட்டு வரும்நிலையில், கஸ்தூரியின் இந்த ட்வீட், திருச்சி சூர்யாவை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திமுகவுக்கும் மறுபடியும் எரிச்சலூட்டி வருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications