சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தப்பிச்சு போன மிருகம் பஸ்ல அடிபட்டு சாகணும்.. இல்லாட்டி கொரோனா தாக்கி சாகணும்.. கஸ்தூரி விட்ட சாபம்!

Google Oneindia Tamil News

சென்னை: "4 மிருகத்தையும் தூக்குல போட்டாச்சு.. சட்டத்தின் ஓட்டையில் தப்பிவிட்ட அந்த இன்னொருத்தர் பஸ்-ஸில் அடிபட்டு சாகணும்.. இல்லேன்னா கொரோனா வைரஸ் தாக்கி சாகணும் என்று நடிகை கஸ்தூரி சாபம் விட்டுள்ளார்.

நிர்பயா வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்... இதில் ஒருவர் ராம் சிங்.. சிறைக்குள்ளேயே தூக்குப் போட்டு இறந்துவிட்டார்... இன்னொருவர் மைனர்.. 16 வயதுதான்.. அந்த காரணத்திற்காகத்தான் சிறார் சட்டத்தின் கீழ் தப்பி விட்டார்.

இதையடுத்துதான் மற்ற 4 பேருக்கும் வழக்கு விசாரணை நடந்தது. இவர்களுக்கு 3 முறை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ரத்தானது. இதில் 2017-ம் ஆண்டிலேயே தூக்கு விதிக்கப்பட்டபோது பலரும் அதை வரவேற்றனர்.. அப்போது கஸ்தூரியும் வரவேற்று ட்வீட் போட்டிருந்தார்.

தீர்ப்பு

தீர்ப்பு

அதில் "ஒரு மிருகம் மட்டும் சுதந்திரமாக அடியெடுத்து வைத்துள்ளான். அதை மட்டும்தான் என்னால் ஏற்க முடியவில்லை. இந்த தீர்ப்பு மிக மிக சக்தி வாய்ந்த தொடக்கமாக இருக்க வேண்டும்... நிர்பயாவின் பெற்றோரின் கண்ணீரிலிருந்து சட்டப் புரட்சி தொடங்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை" என்று தெரிவித்திருந்தார். 3 வருஷத்துக்கு முன்பே தப்பி சென்ற அந்த மிருகத்தை பற்றி குறிப்பிட்டு பேசியிருந்தார் கஸ்தூரி.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இப்போதும் அதே நபரைதான் ட்வீட் போட்டு கூடவே அவருக்கு ஒரு சாபத்தையும் விட்டுள்ளார். அதில், "நிர்பயா வழக்கில் 4 விலங்குகள் ஒருவழியாக தூக்கிலிடப்பட்டு விட்டன.. ஆனால் அதில் ஒருவர் மட்டும் சட்டத்தின் ஓட்டைகள் மூலம் தப்பித்து கொண்டார்.. அவர் ஒன்று, பஸ்-க்கு அடியில் மாட்டிட்டு சாகணும்.. அல்லது கொரோனா வைரஸ் தாக்கி இறப்பார் என்று நம்புகிறேன் என்று காட்டமாக கூறியுள்ளார்.

ராம்நாத் கோவிந்த்

ராம்நாத் கோவிந்த்

இன்னொரு பதிவில், "7 வருஷங்கள் என்பது மிக நீண்டது.. இந்த நீதிக்காக காத்திருப்பது மிகவும் தவறு... குற்றம் சாட்டப்பட்ட மிருகத்தனமான குற்றவாளிகளுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா தனது சட்ட நடைமுறையை மாற்ற வேண்டும்... நிர்பயா குற்றவாளிகளின் கருணை மனுக்களை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவை நான் ஏற்கிறேன்... விலங்குகளுக்கு கருணையே காட்ட கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

சாபம் ட்வீட்

சாபம் ட்வீட்

தாமதிக்கப்பட்ட நீதி, சரியாக சொன்னீங்க என்று பலரும் கஸ்தூரியின் ட்வீட்டுக்கு பதிலளித்து வருகின்றனர்.. என்றாலும் மிருகங்களை இப்படி அசிங்கப்படுத்த வேண்டாம், எந்த மிருகமும் மனிதர்களின் பெயரை பயன்படுத்துவதில்லை.. என்றும் ட்வீட் போட்டு வருகின்றனர்.. ஆனால் கஸ்தூரி விட்ட சாப ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

English summary
actress kasturi says, at last all four animals in the nirbhaya case have been hanged
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X