கொடி, இடி , அலை, மலை...எக்ஸ் பக்கத்தில் எகிறி எகிறி கஸ்தூரி போட்ட பதிவு- யாருக்காக? இது 'அவருக்காக'?
சென்னை: நடிகை கஸ்தூரி தமது ட்விட்டரில் பக்கத்தில் "கொடி, இடி , அலை, மலை" என அடுக்குமொழியில் பதிவிட்டது பெரும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இந்த வீடு அருகே இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலம் அமைந்துள்ளது.

அண்ணாமலையின் வீடு முன்பாக பிரம்மாண்ட கொடி மரம் ஒன்று நடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட அந்த கொடி மரத்தை போலீசார் அகற்ற முயற்சித்தனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் நடைபெற்ற நிலையில் நடிகை கஸ்தூரி தமது எக்ஸ் பக்கத்தில், கொடி பறக்கட்டும்!
இடி ஒலிக்கட்டும்!
அலை அடிக்கட்டும்
மலை ஜெயிக்கட்டும் !
கதை முடிக்கட்டும் !
அறம் பரவட்டும்!
என பதிவிட்டிருந்தார். நடிகை கஸ்தூரியின் இந்த பதிவு யாருக்கானது? என்ற கேள்விகளை நெட்டிசன்கள் அவரது பக்கத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர். 10 மணிநேரத்தில் சுமார் 70,000 பேர் இந்த பதிவை பார்வையிட்டிருந்தனர்.
இப்பதிவு குறித்த விவாதம் நடைபெற்ற தருணத்தில், பாஜக கொடி கம்ப விவகாரத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவமும் கஸ்தூரியின் எக்ஸ் பதிவு தொடர்பான விவாதத்தில் இணைந்து கொண்டது.
மேலும் @sridharderd என்ற நெட்டிசன் கஸ்தூரியின் எக்ஸ் பக்கத்தில்,
கொடி வீழட்டும்.!
இடி ஓயட்டும்.!
அலை அமுங்கட்டும்.!
மலை மடுவாகட்டும்.!
கதை முடியட்டும்.!
பாசிசம் ஒழியட்டும்.!
பாஜக முடியட்டும்.?
அறம் பரவட்டும்.!
அன்பு தழைத்தோங்கட்டும்.! என பதில் கவிதையை பகிர்ந்துள்ளார். பாஜகவினரோ, நன்றி அக்கா எனவும் பதிவிட்டிருக்கின்றனர்.

அதேபோல @SyedIrshadBash5 என்பவர், கொடி பறக்கும்... திமுக கொடி
இடி ஒலிக்கும். 40/40ம் நமதே என்று.
அலை அடிக்கும். அது திமுக மக்கள் அலை.
மலை ஜெயிக்காது. காரணம்
கோமாளி ஒரு போதும் கோட்டை ஏற முடியாது
கதை முடிக்கட்டும்.. Yes..
இப்போது திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக அகற்றப்பட்டுள்ளது..விரைவில் நாடு முழுவதும் என கஸ்தூரியின் பதிவுக்கு 'பொழிப்புரை' எழுதி உள்ளார்.












Click it and Unblock the Notifications