குஷ்புவுக்கு வந்த சோதனை.. மருத்துவமனையில் அனுமதி.. இடுப்பு எலும்பில் மறுபடியும் சர்ஜரி?
சென்னை: நடிகை குஷ்புவுக்கு இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள வால் எலும்பில் (Tail bone) ஏற்பட்ட கடும் வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு முன்னர் தான் குஷ்புவுக்கு வால் எலும்பில் நுண்துளை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கடந்த 2 ஆண்டுகளாகவே இடுப்பு பகுதியில் அமைந்துள்ள வால் எலும்பில் (Tail bone) ஏற்படும் வலியால் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார். உடல் எடையை குறைத்த பின்னரும் இடுப்பு வால் எலும்பில் (Tail bone) குஷ்புவுக்கு வலி குறைந்தபாடில்லை.

இதனால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைகளை தொடங்கினார். இதனிடையே மருத்துவர்கள் அறிவுரைப்படி கடந்த அக்டோபர் மாதம் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மைக்ரோ இன்சிஷன் முறையில் நுண்துளை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட குஷ்பு அதன் பின்னர் ஓரளவு ஆக்டிவாக இயங்கத் தொடங்கினார்.
அறுவை சிகிச்சையானது அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டதால் மீண்டும் எலும்பு பகுதியில் வலி உட்பட எந்த பிரச்சனையும் ஏற்படாது என நம்பினார். இதனிடையே இப்போது மீண்டும் அவருக்கு இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள வால் எலும்பில் வலி ஆரம்பித்திருக்கிறது.
இதையடுத்து மீண்டும் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குஷ்பு, பூரண நலம்பெறுவேன் என நம்புவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனிடையே இது குறித்து தகவலறிந்த அவரது அரசியல் மற்றும் சினிமா நண்பர்கள் குஷ்புவிடம் நலம் விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே சிகிச்சைகளை முடித்துக்கொண்டு ஓரிரு நாட்களில் குஷ்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications