என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. பிரதமர் மோடி பேச்சை கிண்டலடித்த குஷ்பு!
சென்னை: பிரதமர் மோடியின் பேச்சால் நேரம்தான் வீணானது என விமர்சித்த பிரபல நடிகையை வலைதள வாசிகள் வச்சு செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவும் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸின் பாதிப்பு மக்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது என்றார்.

தயாரக வேண்டும்
தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, ஒரு வைரஸ் உலக நாடுகளை நாசப்படுத்தியிருப்பதாக கூறினார். கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று ம் கூறினார் பிரதமர் மோடி.

பொருளாதார திட்டங்கள்
மேலும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார திட்டங்களை அறிவித்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றார் பிரதமர் மோடி.

4வது லாக்டவுன்
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி 4வது கட்டமாக இந்தியாவில் லாக்டவுன் இருக்கும் என்றார். ஆனால் 4வது கட்ட பொதுமுடக்கம் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். இதுதொடர்பான விபரங்கள் வரும் 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

நடிகை குஷ்பு
மோடியின் பேச்சுக்கு குறித்து சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பிரதமர் மோடியின் பேச்சு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நல்லாருக்கும்..
மிகவும் கடினமான இந்த காலங்களில் ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்சத்தை எப்படி டெபாசிட் செய்வது மோடிஜி 2014 இல் வாக்குறுதியளித்தபடி?? இது நெருக்கடிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? சொலுங்க சாமி, பதினைந்து லட்சம் கொஞ்சம் எல்லா அக்கவுண்ட்லேயும் போட்டிங்கன்னா நல்லா இருக்கும்ல சொல்லுங்க.. என பதிவிட்டுள்ளார்.

வெறும் காத்துதான்..
மற்றொரு டிவிட்டில், 8 மணி.. என்னாச்சு.. வெறும் காத்துதான் வந்துச்சு.. ஃப்யூ.. என ஊதியிருக்கிறார் குஷ்பு. மேலும் 20 லட்சம் கோடி பேக்கேஜ்... வங்கிகளை ஏமாற்றிய நண்பர்களிடம் இருந்து 68000 கோடி ரூபாயை திரும்பப் பெறுவது எப்படி என்று கேட்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் கண்டனம்
மேலும் ஒரு டிவிட்டில் போங்கடா.. என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. டைம் வீணா போச்சு என தெரிவித்திருக்கிறார் குஷ்பு. குஷ்புவின் இந்த டிவிட்டுகளுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications