சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“அந்த ஜாதி பசங்க”.. பட்டியலின மக்கள் குறித்து அவதூறு.. பில்டப் மாடல் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

Google Oneindia Tamil News

சென்னை : பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விசாரணை ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.

சட்டமன்றத்தில் திமுகவே அசந்து போயிருச்சு.. அதிமுக தான் எப்பவும் நம்பர் 1 .. சொல்கிறார் கடம்பூர் ராஜுசட்டமன்றத்தில் திமுகவே அசந்து போயிருச்சு.. அதிமுக தான் எப்பவும் நம்பர் 1 .. சொல்கிறார் கடம்பூர் ராஜு

சூப்பர் மாடல் என தன்னைத் தானே கூறிக் கொண்ட அவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நடிகர்கள் குறித்தும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

சர்ச்சை மீரா மீதுன்

சர்ச்சை மீரா மீதுன்

இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அவதூறாக பேசிய வழக்கு

அவதூறாக பேசிய வழக்கு

இந்த புகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் மீரா மிதுன் அடைக்கப்பட்டார். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்

மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்

இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நிபந்தனை ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்

இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை மீரா மிதுன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தன்னுடைய உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

English summary
In the case of slanderous talk about the sc st people , Actress Meera Mithun has been arrested for failing to appear before the court. now Chennai Primary Sessions Court has granted conditional bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X