ஏலேலங்கிளியே.. பூனைக் கண்ணால் மயக்கிய நடிகை மோகினி! இப்போ அமெரிக்காவில் மத போதகராய் மாறிட்டாங்களாம்!
சென்னை : 1990ஆம் ஆண்டுகளில் தனது வசீகரிக்கும் பூனை கண்களால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை மோகினி தற்போது கணவருடன் ஏற்பட்ட விவாகரத்து காரணமாக மத போதகராக அமெரிக்காவில் மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Recommended Video
1990ஆம் ஆண்டுகளில் தியேட்டர்கள் பக்கம் சென்றவர்கள் நடிகை மோகினியை அவ்வளவாக மறந்து விட முடியாது. பார்ப்போரை வசீகரிக்கும் தனது பச்சை நிறக் கண்களுக்காகவே அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர் தமிழ் ரசிகர்கள்.
மோகினி என்கிற மோகினி ஸ்ரீனிவாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் சிறிது காலம் பணியாற்றிய அவர் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

கனவுக் கன்னி
1976ஆம் ஆண்டில் தமிழ் குடும்பத்தில் மகாலட்சுமி என்ற பெயருடன் பிறந்தார். கோயம்புத்தூரில் உள்ள பிரான்சிஸ் ஆங்கிலோ-இந்தியப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த அவர், பின்னர் ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் மோகினியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஈரமான ரோஜா
மோகினி தனது முதல் படமான ஈரமான ரோஜாவில் நடித்ததற்குப் பிறகு, 1991 ஆம் ஆண்டு டான்சர் படத்தில் அக்சய் குமாருடன் கதாநாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் சென்றார். 1999 ல் மோகினி, பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் குடியேறினார். இத் தம்பதியருக்கு, ருத்ராக்ஷ் மற்றும் அனிருத் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

நடிகை மோகினி
சினிமா மட்டுமின்றி டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகை மோகினி , சன் டிவியில் காதல் பகடை, ராஜராஜேஸ்வரி , பொதிகை தொலைக்காட்சியில் ஒரு பெண்ணின் கதை போன்ற தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் மற்றும் ஜெய்ஹிந்த் தொலைக்காட்சியில் கதனார் கடம்பத்து கதனார் என்கிற மலையாளத் தொடரிலும் நடித்துள்ளார்.

மத போதகர்
இந்நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துள்ள மோகினி தனது பெயரை மோகினி கிறிஸ்டினா என மாற்றிக் கொண்டு அமெரிக்காவில் தற்போது ஒரு கத்தோலிக்க நற்செய்தியாளராகவும், மதபோதகராக உள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது. 2006 ஆண்டிலேயே குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்ட நிலையில், தற்போது முழுநேர மதபோதகராக மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
முகம் முழுக்க சோகம்.. தாயார் மறைவால் துபாயில் இருந்து சென்னை வந்த அஜித்குமார் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications