பார்வதி நாயர் வீட்டு நைட் பார்ட்டியில் ஒரு விஷயத்தை பார்த்துட்டேன்.. போலீசுக்கு போன வேலைக்காரர்
சென்னை: நடிகை பார்வதி நாயர் தொடர்பான ஆதாரங்களை நேரம் வரும் போது வெளியிடுவேன் என அவர் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தன. இது தொடர்பாக பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரிந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
காவல் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பார்வதி நாயர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்தார். அதில் தான் ஏற்கெனவே கொடுத்த புகாரின் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

4 பேரிடம் விசாரணை
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எனது வீட்டில் கடந்த மாதம் 15 ஆம் தேதி விலையுயர்ந்த பொருட்கள் திருடுபோயுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக 20 ஆம் தேதி நான் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இளங்கோ, சுபாஷ் சந்திரபோஸ், விஜய், அமல் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

சுபாஷ் மீது புகார்
ஆனால் அந்த 4 பேரில் சுபாஷ் என் மீது தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறார். தனிப்பட்ட முறையில் என்னை மிரட்டுகிறார். மேலும் சுபாஷ் தன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க விசாரணைக்கு மற்றவர்களை போல் ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி வழங்கவில்லை. என்னை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகிறார். தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு அவர் அளித்து வரும் பேட்டியில் என் மீதான தவறான விஷயங்களை தெரிவித்து வருகிறார். எனது சினிமா வளர்ச்சியை பிடிக்காத யாரோதான் சுபாஷை ஆட்டுவிக்கிறார்கள்.

புகைப்படங்கள்
அவரும் அதற்கேற்ப என்னை துன்புறுத்துகிறார். எனக்கே தெரியாமல் என்னை நிறைய புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளார். அவர் என் வீட்டு பணியாளர், அவ்வளவுதான். ஏதோ என் உறவினர் போல் நடந்து கொள்கிறார். நான் வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். என் வீட்டிற்கு ஆண் நண்பர்கள் வந்து செல்கிறார்கள் என சுபாஷ் சொல்வதெல்லாம் பொய்யான தகவல் என பார்வதி நாயர் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

ஒரு தலைபட்சம்
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சுபாஷ் சந்திரபோஸ் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். பார்வதி நாயர் கொடுத்த புகாருக்கு மட்டுமே என்னை அழைத்து விசாரணை நடத்தப்படுவதாகவும் நான் அவர் மீது கொடுத்த புகார்களுக்கு இதுவரை அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படுவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது நான் பார்வதி நாயர் வீட்டில் திருடியதாக என் மீது பொய்யான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை மீதும் குற்றச்சாட்டு
என் தந்தை மீதும் நடிகை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். என் தந்தை இறந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பார்வதி நாயர் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியில் நான் ஒரு விஷயத்தை பார்த்துவிட்டேன். இதை நான் வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக என் மீது பார்வதி நாயர் திருட்டு பழியை சுமத்துகிறார். மேலும் நான் அந்த சம்பவத்தை பார்த்த அன்றே இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியிருந்தார். பார்வதி நாயர் என்னென்ன செய்கிறார், அவரது பின்புலம் என்ன என்பது குறித்தெல்லாம் என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. அதை காவல் ஆணையரிடம் காட்டியுள்ளேன். நேரம் வரும் போது பொதுவெளியில் வெளியிடுவேன் என சுபாஷ் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications