நடிகைகள் பாலியல் தொழிலாளிகளா? கொந்தளித்து ரோகிணி புகார்! டாக்டர் காந்தராஜுக்கு சைபர் கிரைம் சம்மன்
சென்னை: நடிகைகள் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியதாக நடிகை ரோகிணி புகார் அளித்ததை அடுத்து டாக்டர் காந்தராஜுக்கு சைபர் கிரைம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். கேரளாவில் ஹேமா கமிட்டிஅறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் காந்தராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகள், பெண் கலைஞர்கள் மீது பாலியல் அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள் குறித்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த அறிக்கையில், கேரள திரையுலகை 15 பேர் கொண்ட ஆட்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்றும் அந்த பவர் கமிட்டியில் முன்னணி நடிகர்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மலையாள நடிகர்கள், இயக்குநர்கள் மீது சில நடிகைகள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அம்மா எனும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால், பொதுச் செயலாளர் சித்திக் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த சங்கமே கலைக்கப்பட்டது.
கேரளாவில் ஒரு படத்தில் நடித்த போது கேரவனில் உடைமாற்றும் அறையில் கேமரா வைத்திருந்ததை தான் கண்டதாகவும் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஹோட்டலில் ரூம் எடுத்து அங்கிருந்து தயாராகி ஸ்பாட்டுக்கு வந்ததாகவும் நடிகை ராதிகா பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இவரை போல் குஷ்பு உள்ளிட்டோரும் பேசியிருந்தனர். இந்த நிலையில் அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் என்பவர் யூடியூப் சேனலில் நடிகர், நடிகைகள் குறித்து ஆபாசமான கருத்துகளை பேட்டியாக அளித்திருந்தார். அவை கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் காந்தராஜின் ஆபாசப் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் சினிமாவின் விசாகா கமிட்டியின் தலைவரான நடிகை ரோகிணி சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
ரோகிணி தனது புகாரில் நடிகைகள் பாலியல் தொழிலாளிகள் என சித்தரித்து இழிவாக காந்தராஜ் பேசியுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்களுடனான தொழில்முறை உரையாடல்களை கூட தவறான தொடர்பு என்பது போல் பேசி கொச்சைப்படுத்தியுள்ளார் என ரோகிணி தெரிவித்துள்ளார்.
ஒரு யூடியூப் சேனலில் பொதுமக்கள் பார்வைக்கு ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளனர். அதில் பேசியுள்ள காந்தராஜ், நடிகைகளை ஒட்டுமொத்தமாக கீழ்த்தரமாக பேசியதோடு அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளிகள் என பேசியுள்ளதை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். இந்த பேட்டி சினிமாத் துறை சார்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் உள்ளது.
மறைந்த நடிகைகள் மஞ்சு, ஜெயலலிதா, முதல் தற்போது புகழின் உச்சியில் உள்ளவர்களை எல்லாம் எடுத்துக்காட்டாக கூறி அவர்களுடைய வாழ்க்கை நடத்தை என தனக்கு சம்பந்தமில்லாத எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேட்டி அளித்ததோடு அதன் மூலமாக நடிகைகள் என்றாலே சினிமாவில் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், இயக்குநர் என விருப்பப்படும் அனைவரிடமும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து பாலியல் தொழில் செய்துதான் நடிக்க வாய்ப்பு பெறுகிறார்கள் என்பது போல் கூறியதோடு மேடை நாகரீகமோ அல்லது சமூக பொறுப்போ இல்லாமல் தனக்கு தோன்றியவற்றை எல்லாம் பேசி நாக்கூசும் வார்த்தைதளையும் பேட்டி என்ற பெயரில் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளது ஒட்டுமொத்த பெண்களையும் ஏளனமாகவும் பாலியல் தொழில் செய்பவர்களாகவும் சித்தரித்துள்ளது குற்றச்செயலாகும்.
மேலும் காந்தராஜ் தனது பட்டியில் சினிமா உள்ளார வரும் போது இந்த அட்ஜெஸ்ட்மென்ட் எல்லாம் பண்ணிதான் வருவாங்க என தொடங்கி பல ஆபாசமான விஷயங்களை ஆதாரமே இல்லாமல் பேசியது தண்டனைக்குரிய குற்றச் செயலாகும். மேலும் இந்த வீடியோவை அந்த யூடியூப் சேனலில் இருந்து நீக்கி , மருத்துவர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகாரில் ரோகிணி தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மத்திய சைபர் கிரைம் போலீஸார் காந்தராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து காந்தராஜை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications